சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு இன்னும் 3 வாரத்திற்குள் தீர்வு - லிட்ரோ நிறுவனம் உறுதி

01 Jan, 2022 | 01:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு இன்னும் 3 வார காலத்திற்குள் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தரம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளை முறையாக செயற்படுத்துவோம். 

பாதுகாப்பான சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஸாரா ஜயசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சமையல் எரிவாயு கசிவு வெடிப்பு சம்பவத்தினை தொடர்ந்து நுகர்வோர் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதை தவிர்த்ததால் பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டோம்.

தர நிர்யணத்திற்கமைய எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு ஒழுங்குப்படுத்தல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் சமையல் மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்களை பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்யவும் விநியோகிக்கவும் துரிதகரமான நடவடிக்கையினை தற்போது மேற்கொண்டுள்ளது.

சிலிண்டரின் பாதுகாப்பின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ள காரணத்தினால் விநியோக கட்டமைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வழமையான நாட்களில் ஒரு நாளைக்கு 40ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டன.

கடந்த மாதங்களில் 350000 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டன.

தற்போதைய நிலைமையில் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கான கேள்வி உயர்மட்டத்தில் காணப்படுகின்றன.

எதிர்வரும் நாட்களில் 180,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்த்துள்ளோம். எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாதமத்தினால் நுகர்வோர் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களுக்காக கவலையடைகிறோம் .

 இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் நேரடி கண்காணிப்பிற்கமைய தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன. எரிவாயு சிலிண்டருக்கு தற்போது சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டுக்கு இன்னும் 3 வார காலத்திற்குள் தீர்வு முன்வைக்கப்படும்.

பாதுகாப்பான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறித்து நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளை முழுமையாக செயற்படுத்தியுள்ளோம். சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவங்களுக்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தின.

எரிவாயு கலவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதங்களில் மாத்திரம் ஒரு நாளைக்கு  300 இற்கும் அதிகமான சிலிண்டர்களின் பாதுகாப்பு தரத்தினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.தற்போது அந்நடவடிக்கை 20000 ஆயிரம் வரை உயர்வடைந்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32