வென்னப்புவ - வைக்கால பகுதியில் வங்கியொன்றில் கொள்ளையிட முற்பட்டதாக கூறப்படும் வங்கியின் முகாமையாளர் உட்பட நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

 கடந்த செப்டம்பர் மாதம் 15 மற்றும் 19 ஆம் திகதிகளில் வங்கியினுள் நுளைந்து சிலர் திருட முற்பட்டுள்ளதாக வங்கியின் முகாமையாளர் கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேக நபர்கள் வங்கியின் பாதுகாப்பு கெமராக்களை செயலிழக்க செய்துவிட்டு, வங்கியின் பின் கதவால் நுளைந்து வங்கியில் உள்ள பணப் பாதுகாப்பு இடத்தினை துளையிட்டு திருட முயற்சித்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில்  வங்கியின் முகாமையாளர் உட்பட நால்வரை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலும் 3 பேர் சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரையும் இன்று மாரவில நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.