மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பிரதான வீதிகளில் யூ வளைவுள்ள இடங்களை வாகன சாரதிகள் முன்கூட்டியே அறிந்து வாகனங்களில் வேகத்தை குறைத்து அவதானமாக செலுத்தும்படி வேண்டி வேகத்தடை வீதிக் கோடுபோடும் பணிகள் மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட மட்டக்களப்பு, கல்முனை நாவற்குடா,கல்லடி ,நொச்சிமுனை,மஞ்சந்தொடுவாய் ஆகிய பிரதான வீதிகளில் அமைந்துள்ள யூ வளைவுள்ள இடங்களுக்கு அருகாமையில் மேற்படி வேகத்தடை வீதிக் கோடு போடும் பணிகள் தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றது.

இதனால் வீதியில் செல்லும் பொது மக்கள், பாடசாலை மாணவர்கள்,வாகனங்களை ஓட்டும் சாரதிகள் என பலரும் நன்மையடையவுள்ளனர்.