இன்று முற்பகல் 11.45க்கு தென் கடற்பரப்பில் விழவுள்ள மர்ம பொருள்

19 Nov, 2015 | 11:02 AM
image

விண்­வெளிக்கு ஏவப்­பட்ட விண்­கலம் ஒன்றின் பாக­மான டப்­ளியூ. ரி 1190 எப் என்ற வான் பொருள் இன்று இலங்­கையின் தென் கடற்­ப­ரப்பில் விழ­வுள்­ளது. இன்­றைய தினம் முற்­பகல் 11.45 மணிக்கு கட­லோ­ரத்­தி­லி­ருந்து 62 மைல் தூரத்­திற்கு அப்­பாலே குறித்த வான் மர்­ம­பொருள் விழும் என்று விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.



இரண்டு மீற்றர் அள­வினை கொண்ட குறித்த வான்­பொருள் விண்வெளிக்கு அனுப்­பப் பட்ட அப்பலோ விண்­க­லத்தின் பாக­மாக இருக்­கலாம் எனவும் விஞ்­ஞா­னிகள் எதிர்வு கூறி­யுள்­ளனர்.


மேலும் குறித்த மர்ம பொருளை அவ­தா­னிப்­ப­தற்கு இலங்கை விண்வெளி ஆய்வு கூடத்தின் விஞ்­ஞா­னிகள் தயா­ராக இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இது குறித்து விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சு வெளியிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
விண்வெளிக்கு அனுப்­பப்பட்ட விண்­க­ல­மொன்றின் பாகம் இன்று முற்­பகல் 11.45 மணி­ய­ளவில் இலங்­கையின் தென் கடற்­ப­ரப்பில் விழ­வுள்­ளது. இதன்­படி தென் கட­லோ­ரத்­தி­லி­ருந்து 62 மைல் தூரத்­தி­லேயே குறித்த பாகம் விழும் என எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது.


குறித்த விண்­கல பாக­மா­னது இரண்டு மீற்றர் அள­வினை கொண்­ட­தாக காணப்­படும். இந்த விண்கல பாகம் 1960 முதல் 1970 வரை­யி­லான காலப்­ப­கு­தியின் போது விண்வெளிக்கு அனுப்­பப்பட்டதாக இருக்­கலாம் என கூறப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக அப்பலோ விண்­க­லத்தின் பாக­மாக இருக்க கூடும் என்றே விஞ்­ஞா­னி­கள் எதிர்வு கூறி­யுள்­ளனர்.
இதே­வேளை குறித்த பாக­மா­னது, அனை­வ­ராலும் கண்­கா­ணிக்கும் வகையில் பாரிய ஒ ளியுடன் விழும் என ஐரோப்­பிய விண்வெளி கண்­கா­ணிப்பு மையம் அறி­வித்­துள்­ளது. இந்த பாகத்தின் சில பகு­திகள் பூலோக அண்­ட­வெளியில் சிதறி அழி­வ­டைய கூடும். இதே­வேளை சில வேளை­களில் குறித்த பாகம் முழு­வதும் சிதறி அழி­வ­டை­யலாம் என்றும் எதிர்வு கூறப்­ப­டு­கின்­றது.


மிகவும் சிறிய அள­வி­லான வான் மர்­ம­பொ­ருள்கள் ஐந்து இலட்­சத்­திற்கும் மேல் விண்­வெ ளியில் காணப்­ப­டு­கின்­றன. நான்கு அங்­கு­லத்­திற்கு அதி­க­மாக வான் பொருட்கள் 20 ஆயி­ரத்­திற்கும் மேல் காணப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான வான் மர்­ம­பொ­ருட்கள் மணிக்கு 17 ஆயி­ரத்து 500 வேகத்தில் அல்­லது அதற்கும் அதி­க­மான வேகத்தில் பய­ணிக்கும். இவ்­வா­றான வான் பொருட்­களின் வேகத்­தினால் விண்­க­லத்­திற்கு அல்­லது செயற்கை கோளுக்கும் ஆபத்து ஏற்­ப­டக் கூடும்.
இலங்கை தென் கட­லோ­ரத்தில் விழ­வுள்ள குறித்த வான் மர்­ம­பொருள் இயற்­கை­யா­னது அல்ல. மாறாக மனி­தனால் விண்வெளிக்கு அனுப்­பட்ட விண்­க­லத்தின் ஒரு பாக­மாகும். டப்­ளியூ. ரி 1190 எப் என்ற நாமம் கொண்ட வான் மர்­ம­பொ­ருளை கண்­கா­ணிப்­ப­தற்கு தயாராக இருக்கிறோம். இதனை அவ­தா­னிப்­ப­தாக இருந்தால் முற்­பகல் 10.30 முதல் 12.30 வரை­யி­லான காலப்­ப­கு­தியின் போது அவ­தா­னிக்க முடியும். இதேவேளை இலங்கையின் தென் வான் மற்றும் கடற்பரப்பை நேற்றும் இன்றும் எச்சரிக்கை வலயமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. ஆகையால் குறித்த தினங்களில் மீனவர்கள் எவரும் மீன்பிடிக்க செல்லக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56