பெற்றோலிய பொருட்களை பாவிக்கும் ஒவ்வொருவரும் அது தொடர்பான கேள்விகளையும் முறைப்பாடுகளையும் முன்வைக்கலாம் !

31 Dec, 2021 | 12:09 PM
image

(நேர்காணல் : எம்.மனோசித்ரா )

பெற்றோலிய பொருட்களை பாவிக்கும் ஒவ்வொருவரும் அது தொடர்பாக கேள்வி கேட்கவும் அது தொடர்பாக முறைப்பாடுகளை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்க முடியும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்தார். 

பெற்றோலிய தொழிற்துறை தொடர்பாக வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த கலந்துரையாடல் சுருக்கமாக இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

கேள்வி : பெற்றோலிய தொழிற்துறையில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பங்களிப்பு என்ன?

பதில் : பெற்றோலிய தொழிற்துறையில் தரம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நிழல் ஒழுங்குறுத்துனராக பெயரிடப்பட்டுள்ளது. காரணம் அதற்காக பெற்றோலிய துறையில் உரிய சட்டம் இன்னும் உருவாக்கப்படவில்லை.

எவ்வாறிருப்பினும் அமைச்சரவை அங்கீகாரத்தினூடாக , 'பெற்றோலிய தொழிற்துறையில் பாவனையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறையை செயற்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு செயற்பட முடியும்" என்று அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவானது வலுசக்தி அமைச்சுடன் இணைந்து எரிபொருள் பாவனையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு பொறிமுறையை ஸ்தாபித்துள்ளது. அதே போன்று எரிபொருள் பாவனையாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையும் இதில் உள்ளடங்குகின்றன. இது தவிர பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு உராய்வு நீக்கி எண்ணெய் தொடர்பான ஒழுங்குமுறைகளையும் மதிப்பீடு செய்கிறது.

உராய்வு நீக்கி எண்ணெய் துறையின் ஒழுங்குறுத்துனராக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவானது வலுசக்தி அமைச்சு மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனத்துடன் இணைந்து உராய்வு நீக்கி எண்ணெய்யின் தரத்தை உருவாக்கியுள்ளது. அதேபோன்று உராய்வு நீக்கி எண்ணெய் துறையின் தரம் தொடர்பான செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளையும் அமைச்சிற்கு வழங்குகிறது.

கேள்வி : உராய்வு நீக்கி எண்ணெய் சந்தையில் ஆணைக்குழு எவ்வாறு செயற்படுகிறது?

பதில் : உராய்வு நீக்கி எண்ணெய் துறை தொடர்பான ஒழுங்குமுறைகள் அமைச்சரவை தீர்மானமாகவே கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே ஒழுங்குறுத்துனராக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவானது பல கடமைகளை ஆற்றுகிறது. அவற்றில் முதலாவது , உராய்வு நீக்கி எண்ணெய் துறை தொடர்பான தரங்களை இலங்கை தர நிர்ணய நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தலாகும். அதே போன்று அந்த தரங்களுக்கு அமைவாக உராய்வு நீக்கி எண்ணெய் பொது மக்கள் விநியோகிக்கப்படுகிறதா என்பதை பரிசோதித்தலும் முன்னெடுக்கப்படுகிறது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் இணைந்து இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவை தவிர உராய்வு நீக்கி எண்ணெய் துறையில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அவை தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்ய முடியும். அவை தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும். உராய்வு நீக்கி எண்ணெய்யை விநியோகிக்க வேண்டுமெனில் உராய்வு நீக்கி எண்ணெய் துறையில் வலுசக்தி அமைச்சின் அனுமதி அத்தியாவசியமானதாகும்.

அனுமதி வழங்குவதற்கான சேவையையும் ஆணைக்குழு அமைச்சுடன் இணைந்து முன்னெடுத்து வருகிறது.

கேள்வி : அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குறுத்துகை நிறுவனமாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பெற்றோலியத் தொழில்துறைக்கு கிடைக்கப் பெற்றுள்ள நன்மைகள் என்ன?

பதில் : இதில் முதலாவது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டமாகும். அதற்கமைய ஒவ்வொரு மாவட்ட செயலக மட்டங்கள் வரை சென்று மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று உராய்வு நீக்கி எண்ணெய் துறையில் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக உரிய தரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோன்ற பல சட்ட திட்டங்களும் ஆணைக்குழுவினால் உருவாக்கப்பட்டு அமைச்சுடன் இணைந்து அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கேள்வி : பெற்றோலிய தொழிற்துறையில் பாவனையாளர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் அறிக்கை மற்றும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளின் மூலம் பாவனையாளர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை என்ன?

பதில் : பாவனையாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள் எனும் போது பெற்றோலிய தொழிற்துறையில் அவற்றைப் பெற்றுக் கொள்ளும் போது பல உரிமைகள் அவர்களுக்குண்டு. உதாரணமாக இது தொடர்பில் தகவல்களை அறியும் உரிமை காணப்படுகிறது. உரிய விலைக்கு இவற்றை பெற்றுக் கொள்ளக் கூடிய உரிமை கிடைக்கப்பெறுகிறது. இது போன்ற பல உரிமைகள் மக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

இது மக்களின் உரிமைகள் தொடர்பான முற்போக்கான செயற்பாடாகும்.

உரிமைகளை வழங்கும் நடவடிக்கைகள் ஊடாக மேலும் முன்னோக்கிச் செல்ல முடியும். முரண்பாடுகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையானது, பாவனையாளர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின் , சேவை வழங்குனரிடம் அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை எனில் அது தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்து நியாயத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54