குழந்தை பேறின்மைக்கான கருக்குழாய் அடைப்பை தீர்ப்பது எப்படி?

Published By: Robert

03 Oct, 2016 | 10:59 AM
image

இன்­றைய கால­கட்­டத்தில் குழந்தை பேறின்­மையால் தவிக்கும் தம்­ப­தி­யர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து கொண்டு இருக்­கி­றது. குறை­பா­டுகள் பெண்­க­ளுக்கு மட்­டு­மின்றி ஆண்­க­ளுக்கும் சம­மாக அதி­க­ரித்து கொண்டு வரு­கி­றது. உணவு பழக்­க­வ­ழக்­கங்­களும், வாழ்க்கை முறை­களும் மாறி­ வ­ரு­வதால் பெண்­களில் நீர்­கட்­டிகள், கர்ப்­பப்பை கட்­டிகள் அதி­க­மா­கி­ன்றன.

குழந்­தை­யின்­மைக்­கான முக்­கிய கார­ணங்­களில் ஒன்று கருக்­குழாய் அடைப்பு. ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு­முட்­டையும் இணைந்து ஒரு சிசுவை உண்­டாக்கும் முக்­கிய பாலம் தான் சினைக்­குழாய். சினைக்­ குழாய்கள் பெண்­களின் கர்ப்­பப்­பையில் இடது, வலது என இரு­பு­றமும் இருக்கும். சினைக்­ கு­ழாயின் ஒரு­பக்கம் கர்ப்­ப­ப்பை­யினுள் திறந்த நிலையில் இருக்கும் மறு­பக்கம் கரு முட்­டைப்­பையின் அருகில் இருக்கும். கர்ப்­ப­ப்பை­யி­லி­ருந்து வரும் ஆணின் உயி­ர­ணுக்­க­ளையும், கரு முட்­டை­யையும் சினைக்­கு­ழாய்க்குள் எடுத்து சென்று கருத்­த­ரிக்கும் சிசுவை 48 மணி நேரத்­திற்குள் கர்ப்­பப்பை அறைக்கு சேர்த்து விடலாம். கருக்­கு­ழாயில் கருத்­த­ரிக்கும் சிசு, கருக்­கு­ழா­யினுள் செல்ல இய­லாமல் குழா­யி­லேயே தங்கி, வளர்ச்சி அடை­யவும் இது கார­ண­மா­கலாம். இது பெண்ணின் உயி­ருக்கே ஆபத்தை ஏற்­ப­டுத்தும். கருக்­குழாய் அடைப்பை ஸ்கேன், எக்ஸ்ரே, லெப்ரோஸ்­கோப்பி மூலமும் கண்­டு­பி­டிக்­கலாம்.

இன்­றைய காலக்­கட்­டத்தில் கரு­வு­றாமை அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது. இதற்கு முக்­கிய காரணம் கருக்­கு­ழாயில் ஏற்­படும் பிரச்­சி­னை­க­ளாகும். அதனால் ஏற்­படும் விளை­வு­களை பார்ப்போம்.

கருக்­கு­ழாயில் அடைப்பு இருந்­தது என கண்­ட­றி­யப்­பட்டால் நமக்கு தெரிய வேண்­டிய மற்ற விவ­ரங்கள் ஒரு பக்­கமா அல்லது இரண்டு பக்­கங்­க­ளி­லுமா?, கர்ப்­பப்பை பக்­கத்­திலா அல்­லது முட்டைப் பையின் அரு­கிலா?, டியூப்பை சுற்றி சரி­யாக உள்­ள­தா? அது மட்­டு­மன்றி மற்ற இன்­ப­க் ஷன்கள் இருக்­கி­றதா? என முழு­வி­வ­ரமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

கருக்­கு­ழாயில் ஏற்­பட்­டுள்ள அடைப்பை நீக்­கு­வ­தற்கு முன்பு இவை எல்­லா­வற்­றையும் சரி­யாக கணிக்க வேண்டும். இல்­லா­விட்டால் கருக்­கு­ழாயில் ஏற்­பட்­டுள்ள அடைப்பை நீக்­கிய பிறகு கூட மற்ற கார­ணங்­களால் கருத்­த­ரிப்­பது கடி­ன­மா­கி­றது. சிலர் இந்த கணிப்­புக்கள் எதையும் செய்­யாமல் அதற்­கு­ரிய டெக்­னிக்கல் சப்போட் கரு­விகள் இல்­லாமல் லெப்­ப­ரோஸ்­கோப்பி செய்து கொண்டு மட்டும் வரு­கி­றார்கள். இதனால் மறு­ப­டியும் ஒரு அறுவை சிகிச்­சைக்கு செல்லும் நிலை ஏற்­ப­டு­கி­றது செலவும் பன்­ம­டங்­கா­கி­றது. இதில் முக்­கி­ய­மான சிகிச்சை என்­ன­வென்றால் கருக்­குழாய் அடைப்பு நீக்கல்.

பருவ வய­திலோ அதன் பிறகு வரும் நோய்­களாலோ இது ஏற்­ப­டு­கி­றது. முக்­கி­ய­மாக இது ஹிஸ்­டி­ராஸ்­கோப்பி மற்றும் லெப்ரோஸ்­கோப்பி மூல­மாக செய்­யப்­ப­டு­கி­றது. இதில் வெற்றி விகிதம் அதிகம். 30 வீதம் இதற்­காக ஸ்பெஷ­லாக செய்­யப்­பட்ட நூலிழை போன்ற டியூப்பை விட்டு அடைப்பு நீக்­கப்­ப­டு­கி­றது. சில சமயம் ஒரு பக்கம் நீக்­கி­னாலே சாதா­ர­ண­மாக கருத்­த­ரிக்க வாய்ப்பு உள்­ளது. இதில் உட­ன­டி­யாக கருத்­த­ரிக்கும் வாய்ப்பும் உண்டு. நான் இது­போன்று பல பேருக்கு சிகிச்சை செய்து இன்று அவர்கள் இரு குழந்­தை­க­ளுடன் சந்­தோ­ஷ­மாக உள்­ளார்கள். அடுத்த குழந்­தைக்கு வாய்ப்­புகள் அதிகம். இதனால் ஏற்­படும் மகிழ்ச்சி மிக மிக அதிகம். இதன் பக்க விளை­வுகள் குறைவு. வேறு எந்த சிகிச்­சையும் தேவைப்­ப­டாது.

சில சமயம் கருக்­கு­ழாயின் நுனியில் அடைப்பு ஏற்­ப­டலாம். இது ஒட்­டியும் இருக்­கலாம். லெப்­ராஸ்­கோப்பி செய்யும் போது நுனி பகு­தியை அதற்­கு­ரிய கரு­வியை வைத்து பெரி­தாக்­கலாம். இதில் மிக அதிக ப்ரஷரில் தள்­ளி­னாலே கருக்­குழாய் விரி­வ­டைந்­து­விடும்.

Neoostomy இது கருக்­கு­ழாயின் நடுவில் அல்­லது டியூபின் மூன்றாம் பகு­தி­யிலோ அடைப்பு இருந்தால் புதி­தாக ஒரு துவாரம் போட்டு அதன் வழியே செய்­யப்­ப­டு­கி­றது. இதில் குறை­வான வெற்றி வாய்ப்பே உள்­ளது.

எங்கள் GBR கிளினிக் பெர்­ஷ­லிட்டி சென்­டரில் இதைப்போல் பல பேர்­க­ளுக்கு கருக்குழாய் பிரச்சினைகளும் அடைப்புகளும் அதி நவீன சிகிச்சை மூலம் நீக்கப்படுவதால் எளிதாக கருத்தரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலமாக பல தம்பதியர்கள் டெஸ்ட் டியூப் குழந்தைக்காக வந்தவர்கள் சாதாரணமாக கருவுற்று இன்று மகிழ்ச்சியாக உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29