113 ஓட்டங்களினால் தென்னாபிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

Published By: Vishnu

30 Dec, 2021 | 06:17 PM
image

செஞ்சூரியனில் ஞாயிறு அன்று ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவை 113 ஓட்டங்களினால் வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா  1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Image

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக ஆரம்பமாகியுள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த 26 ஆம் திகதி செஞ்சூரியனில் ஆரம்பமானது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 327 ஓட்டங்களை குவித்தது. 

அணி சார்பில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 123 ஓட்டங்களையும் மயங்க் அகர்வால் 60 ஓட்டங்களையும் எடுத்தனர். 

தென்னாபிரிக்கா தரப்பில் லுங்கி நிகிடி அதிகபடியாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்கா 197 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அதிகப்பட்சமாக பவுமா 52 ஓட்டங்களை எடுத்தார். 

இந்திய அணி தரப்பில் மொஹமட் சமி 5 விக்கெட்டுகளையும் சர்துல் தாகூர் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மொஹமட் சிராஜ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

130 ஓட்டங்கள் முன்னிலையில் 2 ஆவது இன்னிங்ஸுக்கா துடுப்பெடுத்தாடிய இந்தியா 174 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதனால் தென்னாபிரிக்காவுக்கு 305 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

வலுவான இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா நேற்றைய 4 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 94 ஓட்டங்களை எடுத்திருந்தது. 

அணித் தலைவர் எல்கர் 52 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். 

இன்று கடைசி நாள் ஆட்டம் ஆரம்பிக்க பும்ராவின் நேர்த்தியான பந்து வீச்சால் எல்கர் 77 ஓட்டங்களுடன் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்த வந்த டி காக் (21) சிராஜ் பந்து வீச்சிலும் முல்டர் (1) சமி பந்து வீச்சிலும் வெளியேறினார். 

இறுதியாக தென்னாபிரிக்கா மதியநேர உணவு இடைவேளைக்கு பின்னர் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

மதிய உணவு இடைவேளையின் போது 7 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை எடுத்திருந்தது தென்னாபிரிக்க, உணவு இடைவேளையின் பின்னர் அடுத்த 09 ஓட்டங்களுக்கு மீதமிருந்த மூன்று விக்கெட்டுகளையும் இழந்தது.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, மொஹமட் ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மொஹமட் சிராஜ் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20