விளம்பர பலகையில் நீலப்படம் ; ஆச்சரியத்தில் மக்கள்

03 Oct, 2016 | 10:52 AM
image

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் மின் விளம்பர பலகையொன்றில் திடீரென்று ஆபாச பட வீடியோ ஒளிபரப்பான சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜகார்த்தாவில் அதிக வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் வீதியின் ஓரத்தில் மின் விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தன்று மாலை நேரம் பொதுவாக கூட்ட நெரிசம் மிகுந்த அந்த வீதியில் திடீரென்று அந்த விளம்பர பலகையில் ஆபாச படமொன்று ஒளிபரப்பானது.  அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்களை அதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

குறித்த வீடியோ 5 நிமிடங்கள் ஓடிய அந்த திரைப்பட காட்சிகள் வாகனங்களில் இருந்த பெண்களை முகம் சுழிக்கும்படி வைத்துள்ளது. இதனிடையே சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் குறிப்பிட்ட விளம்பர பலகையின் மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.

சம்பவம் குறித்து நடந்த விசாரணையில் இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது குறும்பாக எவரும் இத்தகைய காட்சிகளை ஓடவிட்டார்களா என தகவல்கள் இல்லை. ஆனால் கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட ஆபாச காட்சிகள் ஒளிபரப்பான மின் விளம்பர பலகையானது நகர மேயரின் அலுவலகம் அருகே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதை இளைஞர் ஒருவர் தனது ஸ்மார்ட் போனின் செயலியை பயன்படுத்தி குறிப்பிட்ட காட்சிகள் கொண்ட அந்த திரைப்படம் எது என்று கண்டு பிடித்து தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார்.

அந்த பேஸ்புக் பதிவும் குறிப்பிட்ட செய்தியும் தற்போது மக்கள் மத்தியில் மிக விரைவாக பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13