சிறப்பான போக்குவரத்து சேவை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா

Published By: Digital Desk 3

30 Dec, 2021 | 09:21 AM
image

மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை கிடைக்கும் வகையில் அரச மற்றும் தனியார் போக்குவத்து சேவை விரைவில் ஒழுங்குபடுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், யாழ்ப்பாண நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தினை பயன்படுத்துவது தொடர்பான இழுபறி நிலைக்கு விரைவில் இறுதித் தீர்வு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

யாழ்.  மாவட்ட செயலகத்தில் இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் போக்குவரத்து துறையினருக்கும் இடையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான கலந்துரையாடல் நேற்று (29.12.2021) நடைபெற்றது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், மக்களுக்கு பாதிப்புக்கள் அற்ற நிறைவான போக்குவத்து சேவை வழங்கப்பட வேண்டும் எனவும், அதற்கு அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறையினர் மத்தியில் புரிந்துணர்வுடனான சேவை ஏற்படுத்துவதே இன்றைய கூட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தின்போது, யாழ் மாவட்டத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளை இணைந்த நேர அட்டவணையில் மேற்கொள்வதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள், மற்றும் யாழ் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தினை மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயற்படுத்தவது உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது, அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர்,  குறித்த விடயங்கள் தொடர்பாக துறைசார் அமைச்சர்களுடன் கலந்துரையாடி விரைவில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29