எடை குறைந்த குழந்தைகள் பட்டியலில் இலங்கை 67வது இடம்

29 Dec, 2021 | 02:10 PM
image

தெற்காசியாவில் அதிக எடை குறைந்த குழந்தைகள் பட்டியலில் இந்தியாவுடன் இலங்கையும் உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

119 நாடுகளில் இந்தியா 103வது இடத்திலும், இலங்கை 67வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த அளவுகோல்களின் அடிப்படையில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 15 சதவீதமான குழந்தைகள் குறைந்த எடையுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மற்றும் இந்தியாவுடன் முறையே இந்தோனேசியா, நேபாளம் மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளும் இப்பட்டியலில் இணைந்துள்ளன.

ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 2020 ஆம் ஆண்டில், 9.9 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறைந்த எடையுடன் பிறத்தல், குறைந்தளவு தாய்ப்பால், குறைந்த தாய்வழி கல்வி நிலை, தந்தை புகைபிடித்தல், மது துஷ்பிரயோகம், மோசமான ஊட்டச்சத்து  மற்றும் வறுமை ஆகியவை இலங்கையில் குழந்தைகளை பாதிக்கப்படுவதற்கான காரணங்கள் என உணவு மற்றும் விவசாய அமைப்பு குறிப்பிடுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47