தமிழ் மக்கள் வெறுமனே தரகர்களை மட்டுமே உருவாக்கியிருக்கிறார்கள் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன்

Published By: Digital Desk 3

29 Dec, 2021 | 09:50 AM
image

(எம்.நியூட்டன்)

தமிழ் கட்சிகளிற்கு மட்டும் வாக்களிப்போமென தெரிவித்து வடகிழக்கு தமிழ் மக்கள் வெறுமனே தரகர்களை மட்டுமே உருவாக்கியிருக்கிறார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான சந்திரசேகரன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை   இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில்,

கடந்த தேர்தல்களில் ஒரு சாரார் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வாக்களித்தனர். அவரோ அதனை ஜனாதிபதி கோத்தபாயவிற்கு தாரைவார்த்து விற்றுவிட்டார்.

இன்னொரு சாரார் அங்கயன் இராமநாதனிற்கு வாக்களித்தனர். அவரும் அதனை ஜனாதிபதி கோத்தபாயவிற்கு தாரை வார்த்து விற்றுவிட்டார்.

இன்னும் சிலரோ கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரனிற்கு வாக்களித்தனர். அவர் ரணிலுக்கும் தற்போது சஜித்திற்கும் அதனை விற்றுவருகின்றார்.

இவ்வாறு தரகர்கள்,புறோக்கர்கள் ஊடாக தெற்கிற்கு தாரை வார்ப்பதை விடுத்து தற்போது தெற்கில் பலம் வாய்ந்த மாற்று சக்தியாக பரிணமித்துள்ள தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்வதன் மூலம் தமிழ் மக்கள் நல்லதொரு விடிவை பெறமுடியுமென  தற்போதைய ஜனாதிபதி கோட்டாபாய மக்களது ஆதரவை மிகவேகமாக இழந்துவருகின்றார்.  அவர் அவ்வாறு மக்கள் ஆதரவை இழக்கின்ற போது மறுபுறம் தனது ஆதரவை பலப்படுத்த வேண்டிய சஜித்  பிறேமதாசாவோ தானும் அதே போன்று வீழ்ந்து கிடக்கின்றார்.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியே தற்பேர்து தன்னை பலப்படுத்தி மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துவருகின்றது.

சர்வதேச நாட்டு தூதர்கள் மற்றும் இராஜதந்திரிகள் தற்போது படையெடுத்து வந்து தேசிய மக்கள் சக்தியை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியை அவர்கள் புரிந்து கொண்டுள்ளமை தெரிகிறது.

இதனிடையே அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்சவை  ஜனாதிபதி முதல் பொதுஜனபெரமுனவை சேர்ந்த அனைவரும் வெளியே போகச்சொல்கின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04