வவுனியாவில் குடிமனைக்குள் கிரவல் அகழ்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு ; பெண் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

28 Dec, 2021 | 05:51 PM
image

வவுனியா, செட்டிகுளம் முகத்தான்குளம் பகுதியில் மக்கள் குடிமனைக்குள் கிரவல் அகழ்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (27.12) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செட்டிகுளம், முகத்தான்குளம், பண்ணை இரண்டு பகுதியில் உள்ள மக்கள் குடிமனைக்குள் உள்ள தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்ட காணியில் கிரவல் அகழ்வதற்கான அனுமதி பிரதேச செயலகத்தால் நபர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த பகுதியில் கிரவல் அகழ்வதற்கு சென்ற போது கிரவல் அகழும் காணியை சுற்றியும், அதனை அண்டியும் குடியிருக்கும் மக்கள், மக்கள் குடிமனைக்குள் கிரவல் அகழ்வதற்கு அனுமதிக்க முடியாது என தடுத்து நிறுத்த முற்பட்டதுடன், அது தொடர்பில் அப் பகுதி கிராம மக்கள் பிரதேச செயலாளருக்கு அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில், கிரவல் அகழ்வதற்கு அனுமதி பெற்றவர் குறித்த பகுதியில் கிரவல் அகழ முற்பட்ட போது மக்களுக்கும், கிரவல் அகழ வந்தவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது பெண் ஒருவர், தன்னை தாக்கியதாக கூறி கிரவல் அகழ அனுமதி பெற்றவர், செட்டிகுளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக அப்பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11