கார்த்திக் நரேனுடன் இணையும் அதர்வா

Published By: Digital Desk 4

28 Dec, 2021 | 01:14 PM
image

தேசிய விருது பெற்ற படத்தில் நடித்த நடிகர் அதர்வா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

'துருவங்கள் பதினாறு', 'மாபியா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக அதர்வா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர்களுடன் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், ஃபர்பாமிங் ஸ்டார் ரகுமான் ஆகியோரும் நடிக்கிறார்கள். இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதர்வா நடிப்பில் டிசம்பர் 24ஆம் திகதியன்று வெளியான 'தள்ளிப்போகாதே' படத்திற்கு ரசிகர்கள் நேர்மறையான ஆதரவை அளித்து வருகிறார்கள். அதர்வா நடிப்பில் தயாராகி வரும் 'குருதி ஆட்டம்', 'அட்ரஸ்', 'ட்ரிக்கர்: ஆகிய படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எக்ஷன் திரில்லராக தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என இயக்குநர் கார்த்திக் நரேன் தெரிவித்திருக்கிறார். அதர்வாவுடன் சரத்குமார்- ரகுமான் இணைந்திருப்பதால், இந்தப் படத்திற்கு தற்போது ரசிகர்களிடத்தில் ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35