'இன்ட்ரா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 4

28 Dec, 2021 | 01:07 PM
image

திரைப்பட பின்னணி பாடகியும், நடிகையுமான ஸ்வாகதா கிருஷ்ணன் நடிப்பில் தயாராகி வரும் 'இன்ட்ரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

அறிமுக இயக்குநர் லியோ விஜயன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'இன்ட்ரா'. நாளாந்த வாழ்வியலுக்கான சிறிய திருட்டுகளில் ஈடுபடும் இரண்டு கதையின் நாயகிகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில், நிஜவாழ்க்கையில் சகோதரிகளான நடிகை மாயா கிருஷ்ணன் மற்றும் நடிகை ஸ்வாகதா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள். 

இவர்களுடன் 'வெற்றிவேல்' பட புகழ் நடிகர் ஆனந்த் நாக் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ரி. ஆர் விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜெசின் ஜோர்ஜ் இசையமைக்கிறார்.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில்,''

 திருட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் 'இன்ட்ரா' திரைக்கதையில், ஒருவர் நாயகியாகவும் மற்றொருவர்  எதிர்மறை நாயகியாகவும் நடிக்கிறார்கள். முதன்முறையாக சகோதரிகள் இருவர், ஒருவர் நாயகியாகவும் மற்றொருவர் வில்லியாகவும் நடிக்கிறார்கள். ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பொள்ளாச்சியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.'' என்றார்.

நாயகி - வில்லி என்ற வேவத்தில் தமிழ்த் திரையுலகில் முதன் முதலாக சகோதரிகள் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. 

ஃபர்ஸ்ட் லுக்கில் இறுவட்டு, பாம்பு, கணினி விளையாட்டு கருவி, கைபேசி, சுத்தியல், துப்பாக்கி என பல பொருட்களுடன் நேர் எதிராக இரண்டு பெண்களின் தோற்றம் இடம் பெற்றிருப்பதால் ஆச்சரியத்துடன் கூடிய வியப்பையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கியிருக்கிறது.

சகோதரி நடிகைகளுள் மாயா கிருஷ்ணன், 'வானவில் வாழ்க்கை', 'தொடரி', 'மகளிர் மட்டும்', 'வேலைக்காரன்', '2 பொயிண்ட் ஓ' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் என்பதும், மற்றொருவரான நடிகை ஸ்வாகதா கிருஷ்ணன்,' காயல்' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35