விக்கிரகங்கள் திருடப்படுவதை தடுத்து நிறுத்துங்கள் : நல்லை ஆதீனம் யாழ். இராணுவ கட்டளைத் தளபதியிடம் கோரிக்கை

Published By: Digital Desk 4

28 Dec, 2021 | 03:00 PM
image

(எம்.நியூட்டன்)

யாழ் மாவட்டத்தில் இருந்து விக்கிரகங்கள் திருடப்படுவதை தடுத்து நிறுத்துங்கள் என நல்லை ஆதீனம் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் மாவட்ட ராணுவ கட்டளைத்தளபதி  இன்று  சேவ்வாய்க்கிழமை காலை  நல்லை ஆதீனத்துடன் சந்தித்து கலந்துரையாடினர். 

குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த நல்லை ஆதீன குரு முதல்வர், 

புதிதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியாக பதவியேற்றுள்ள  என்னை இன்று மரியாதை நிமித்தம் சந்தித்தார்  அவர் புத்தாண்டுக்காக என்னை வந்து சந்திப்பதாக தெரிவித்திருந்தார்.

தற்போதைய யாழ் மாவட்ட நிலை தொடர்பில் விளக்கமாக கேட்டறிந்து கொண்டதோடு அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்தில்  இந்து விக்கிரகங்கள் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் கோரியுள்ளேன்.

அத்துடன்  எதிர்வரும் தைப்பொங்கல் உற்சவத்தினை  இந்து மக்கள் அனைவரும் சுதந்திரமாக கொண்டாடுவதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்குமாறும். கிராமங்களில் ஆலய வழிபாட்டுக்கு இராணுவத்தினரால் இடையூறு ஏற்படாதவாறு செயற்படவேண்டும். 

குறிப்பாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று பொதுமக்கள் தமது வழிபாடுகளையும் மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் எதிர்வரும் புத்தாண்டு நிகழ்வினை  பொது மக்கள் பட்டாசு கொழுத்தி சுதந்திரமாக  கொண்டாடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், தற்போதைய நிலையில்  இனங்களுக்கிடையில் விரிசல் நிலை ஏற்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

இது தொடர்ந்தால் பெரிய ஒரு பிரச்சினையாக உருவெடுக்கும், அதனை நிறுத்துவதற்கு தங்களாலான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும், என்ற ஐந்து கோரிக்கைகளையும் இன்றைய சந்திப்பின் போது நான் எடுத்துரைத்தேன்.

அதற்கு பதில் அளித்த இராணுவ கட்டளைத் தளபதி இவை தொடர்பில் தான் உரிய நடவடிக்கையை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி எடுப்பதாகவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46