மத்திய ஆசிய கரப்பந்தாட்டம் : ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் இலங்கை

28 Dec, 2021 | 11:17 AM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் மத்திய ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்டத்தின் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை தகுதிபெற்றுள்ளது.

இன்று நடைபெறவுள்ள ஆடவருக்கான இறுதிப் போட்டியில் பங்களாதேஷை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.

மாலைதீவுகளுக்கு எதிராக திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் 3 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட இலங்கை தோல்வி அடையாத அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

எவ்வாறாயினும் மாலைதீவுகளுடனான போட்டியில் இலங்கை கடும் சவாலை எதிர்கொண்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

முதலாவது செட்டில் 25 - 19 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஓரளவு இலகுவாக வெற்றிபெற்ற இலங்கை, 2 ஆவது செட்டில் கடும் போட்டிக்கு மத்தியில் 24 - 26 என தோல்வி அடைந்தது.

3 ஆவது செட்டில் மீண்டும் கடும் சவாலை எதிர்கொண்ட இலங்கை ஒருவாறு 25 - 23 என வெற்றிபெற்றது. 

4ஆவது செட்டில் நிதானத்தையும் சிறந்த நுட்பத்தையும் கடைப்பிடித்து விளையாடிய இலங்கை 25 - 19 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மாலைதீவுகளுடனான போட்டியில் மஹேல இந்தீவர பண்டார ஆட்டநாயகனாகத் தெரிவானார்.

5 நாடுகள் பங்குபற்றிய ஆடவர் பிரிவுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் (3 - 0), நேபாளம் (3 - 1), பங்களாதேஷ் (3 - 1) ஆகியவற்றை தனது முதல் 3 போட்டிகளில் இலங்கை வெற்றிகொண்டிருந்தது.

இது இவ்வாறிருக்க, மகளிர் பிரிவில் பங்குபற்றிய இலங்கை, 3ஆம், 4ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் நிரல்படுத்தல் போட்டியில் கிர்கிஸ்தானை தற்போது இலங்கை எதிர்த்தாடிவருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31