எரிவாயு கிடைக்கப்பெற்றதையடுத்து மீண்டும் கொவிட் சடலங்கள் தகனம் : வவுனியா நகரசபை தவிசாளர்

Published By: Digital Desk 4

27 Dec, 2021 | 11:00 PM
image

வவுனியா நகரசபையின் பூந்தோட்டம் மயானத்திற்கு எரிவாயு கிடைக்கப் பெற்றதையடுத்து மீண்டும் கோவிட் சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

கொவிட் சடலங்கள் தகனம் செய்வது தொடர்பில் இன்று (27.12) அவர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா நகரசபைக்கு சொந்தமான பூந்தோட்டம் மின் மயானத்தில் கோவிட் தொற்றால் மரணிப்பவர்களின் உடலங்கள் தகனம் செய்யப்பட்டு வந்ததன.

எரிவாயு தட்டுப்பாடு நிலவும் நிலையில் மின் மாயானத்தில் எரிவாயு முடிந்தமையால் கடந்த சில நாட்களாக மின் மாயனத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்த சிலரது உடல்கள் தகனம் செய்ய முடியாது திருப்பி அனுப்பப்பட்டன.

இந்நிலை தொடர்பில் சுகாதாரப் பிரிவினர், மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கும் தெரியப்படுத்தியிருந்தோம். வவுனியா மாவட்ட அரச அதிபரால் மின் மாயனத்திற்கு நான்கு எரிவாயு சிலின்டர்கள் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கோவிட் சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கோவிட் தொற்று காரணமாக மரணிப்பவர்களின் சடலங்களை வழமை போன்று தொடர்ந்தும் வவுனியா நகரசபையின் பூந்தோட்டம் மின் மயானத்தில் தகனம் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54