நாட்டின் நெருக்கடி நிலையை சாதகமாகப்  பயன்படுத்த சர்வதேசம் முயற்சி  -  விமல் ஆரூடம்

Published By: Digital Desk 4

27 Dec, 2021 | 04:59 PM
image

(ஆர்.யசி)

நீண்ட நாட்களுக்கு பின்னர் நாட்டின் மீண்டும் 13 ஆம் திருத்தம் குறித்தும், இந்தியாவின் அழுத்தம் குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்படுவதுடன்,  இது குறித்து சிறுபான்மை கட்சிகளின் சில முயற்சிகளும் வெளிப்படுகின்றன. 

கிழக்கு முனையத்தை விற்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்பித்தால், அதற்கெதிராக  தீர்மானம் எடுக்கப்படும்: விமல் வீரவன்ச | Virakesari.lk

ஆனால் இந்த செயற்பாடுகள் அனைத்தும் மீண்டும் வலுப்பெற சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலே காரணமாகும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

நாடு சகல விதத்திலும் பலவீனமடைந்து சென்றுகொண்டுள்ள நிலையில் அதனை சாதகமாக பயன்படுத்த சர்வதேச சக்திகள் முயற்சிக்கின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

அதிகார பரவலாக்கல் மற்றும் 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து சில முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முன்வைக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாடு இன்று பாரிய நெருக்கடி நிலைமைகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் விரும்பியோ, விரும்பாமலோ ஒரு சில இறுக்கமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தை நாடவோ அல்லது வெவ்வேறு நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளவோ வேண்டியுள்ளது. 

இந்த முயற்சிகளின் போதும் நாட்டின் பலவீனத்தை கருத்தில் கொண்டு தத்தமது நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தவும் சர்வதேச சக்திகள் முயற்சிக்கின்றனர்.

குறிப்பாக 13 ஆம் திருத்தம் என்ற கதைகள் மீண்டும் பொது விவாதத்திற்கு வருகின்றது. மனோ கணேசன், ஹகீம் போன்றவர்கள் இன்று ஒன்றிணைந்து 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலைத்திட்டங்களின் பின்னணியில் சர்வதேச நிகழ்ச்சி நிரலே இருக்க முடியும்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு வெவ்வேறு நாடுகளும் தமது அரசியல் பொதியை முன்வைக்க நினைக்கின்றனர்.

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைக்காக ஐரோப்பிய ஒன்றியம் சில நிபந்தனைகளை முன்வைப்பார்கள், மனித உரிமைகள் பேரவை சில நிபந்தனைகளை முன்வைப்பார்கள், இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளும் தமது நிதியை பெற்றுக்கொள்ள சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பார்கள். இது பலவீனமான நிலையில் இருக்கும் ஒரு நாட்டின் மீதான அழுத்தங்கள் என்றே நாம் கருதுகின்றோம்.

இந்த அரசாங்கம் இதனை செய்ய தயக்கம் காட்டினால் நாட்டை மேலும் பலவீனப்படுத்தி, ஆட்சி மாற்றம் வரையில் சென்று புதிய அரசாங்கமொன்றை உருவாக்கும் சதிகளை முன்னெடுப்பார்கள்.

நாம் நிராகரித்த சகலதையும் அவர்களுக்கு விசுவாசமான அரசாங்கத்தின் மூலமாக நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பார்கள். ஆகவே அரசாங்கமாக நாம் மிகவும் அவதானமாக தீர்மனம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17