அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடில்லை : அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடுத்த வருடத்தில் தீர்வு - எஸ்.எம்.சந்திரசேன

Published By: Digital Desk 3

27 Dec, 2021 | 03:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஒரு சில பொருட்களின் விலைகள் மாத்திரம் சற்று உயர்வடைந்துள்ளன.

2022 ஆம் ஆண்டு அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்தரப்பினர் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும், பொருட்களின் விலையேற்றம் என குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் பின்னரான சவால்களை எதிர்க்கொள்ள வேண்டிய நிலை தோற்றம் பெற்றுள்ளன.

சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்படவில்லை. ஒரு சில பொருட்களின் விலை மாத்திரம் சற்று உயர்வடைந்துள்ளன. பொருட்களின் விலையேற்றம் என்பது தற்காலிக பிரச்சினையாகும்.

அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தீர்வு பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.

அரசாங்கம் பாரிய சவால்களுக்கு மத்தியில் அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்கிறது. கொவிட் வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க அரசாங்கம் இதுவரை காலமும் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் செயற்திட்டம் சிறந்த முறையில் முன்னெடுத்து செல்லப்படுகிறது. பூகோள பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு அதிக கேள்வி நிலவுவதால் அப்பொருட்களின் விலை தற்காலிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதிர்வரும் ஆண்டு முதல் சிறந்த முறையில் செயற்படுத்தப்படும். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் இனி வரும் காலங்களில் ஏற்படுத்தப்படும் என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38