வடக்கில் ஆலய விக்கிரகங்களை கடத்தி விற்பனை செய்த இருவருக்கும் விளக்கமறியல்

Published By: Digital Desk 4

27 Dec, 2021 | 03:59 PM
image

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் உள்ள ஆலய விக்கிரகங்களை கடத்தி விற்பனை செய்து வந்த இருவரையும் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு , மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

 

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் இருந்த பிள்ளையார் உள்ளிட்ட இந்து கடவுள்களின் விக்கிரகங்களை கடத்தி கொழும்பில் விற்பனை செய்த  குற்றச்சாட்டில் கீரிமலை நல்லிணக்கபுரம் மற்றும் புத்தூர் நவக்கிரி பகுதியை சேர்ந்த இருவர் கடந்த 24ஆம் திகதி காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த 09ஆம் திகதி முதல் 23ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், கொழும்புக்கு கடத்தி விற்பனை செய்யப்பட்ட சிலைகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , கொழும்பு விரைந்த பொலிஸ் குழுவினர் 25ஆம் திகதி கொழும்பில் விற்பனை செய்யப்பட்ட 20 சிலைகளை மீட்டு வந்தனர். 

அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சந்தேக நபர்களை மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தியதை அடுத்து , அவர்களை எதிர்வரும் 05 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14