புகையிரத திணைக்கள அதிகாரிகள் இன்று முக்கிய கலந்துரையாடல்

Published By: Vishnu

27 Dec, 2021 | 07:31 AM
image

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் புகையிரத திணைக்கள அதிகாரிகளுடன் இன்று காலை 10.00 மணிக்கு முக்கிய கலந்துரையாடலில் ஈடபடவுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையினை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.

24 கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் கடந்த 23 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

புகையிரத பொதி சேவை விநியோகம், சாதாரன புகையிரத பயணச்சீட்டு விநியோகம் உள்ளிட்ட கடமைகளில் இருந்து அவர்கள் விலகியிருந்தனர்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் பதவி உயர்வு, இடமாற்றத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க புகையிரத திணைக்களம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட புகையிரதங்களையும் பயணிகள் புகையிரத சேவையில் ஈடுப்படுத்தவில்லை.

இந் நிலையில் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து இன்று புகையிர திணைக்கள அதிகாரிகளுடன் தீர்மானமிக்க பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதால் தொடரவிருந்த முழுமையான பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று தற்காலிகமாக பிற்போடப்பட்டது.

இன்றைய பேச்சுவார்த்தையில் சாதகமான தீர்வு கிடைக்காவிடின் அடுத்தக் கட்ட தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தீர்மானிப்போம் என்று கசுன் சாமர மேலும் கூறினார்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் பயணச் சீட்டு விநியோகிப்பதை பகிஷ்கரித்துள்ளதால் தினமும் 5 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24