இலங்கை பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் ; எச்சரிக்கிறார் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுனர்

Published By: Digital Desk 4

26 Dec, 2021 | 10:09 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை அடுத்த ஆண்டு பாரியதொரு நிதி நெருக்கடியை எதிர்கொள்ளக் கூடிய அபாயம் காணப்படுவதாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுனர் டபிள்யு.ஏ.விஜேவர்தன எச்சரித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு | Virakesari.lk

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினை இவ்வாறு எச்சரித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

இலங்கையிலுள்ள வங்கிகளில் காணப்படும் அந்நிய செலாவணி இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய ரூபா அல்ல.

மத்திய வங்கியின் தரவுகளுக்கமைய இம்மாதம் 24 ஆம் திகதியன்று இலங்கை வங்கி கட்டமைப்பில் 455 பில்லியன் ரூபா பற்றாக்குறை நிலவுகிறது. 

இவ்வாறான நிலையில் தற்போது காணப்படும் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு மத்திய வங்கியினால் ஏனைய வணிக வங்கிகளுக்கு 6 சதவீதம் வட்டி அடிப்படையில் நிதி வழங்கப்பட்டுள்ளது.

மாற்று விகிதங்கள் மற்றும் வட்டி விகிதங்களை செயற்கையாக கட்டுப்படுத்துவதே இந்த நிலைக்கு காரணமாகும். நாட்டில் ஏற்பட்டுள்ள பண வீக்கமானது மத்திய வங்கியின் கொள்கை நிலைப்பாட்டை தடுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பணம் அனுப்புவதற்கான 10 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை அடுத்த வருடம் ஜனவரி 31 ஆம் திகதி வரை நீடிக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11