வெளிநாடுகளில் பணிபுரிவோருக்கு மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு  

Published By: Digital Desk 3

25 Dec, 2021 | 05:44 PM
image

(நா.தனுஜா)

வெளிநாடுகளில் பணிபுரிவோரால் நாட்டிற்குப் பணம் அனுப்பப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 10 ரூபா ஊக்குவிப்புத்தொகை வழங்கும் செயற்திட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிவரை நீடித்திருக்கும் இலங்கை மத்திய வங்கி, அவ்வாறு பணம் அனுப்பும்போது ஏற்படக்கூடிய பரிமாற்றல் செலவில் வரையறுக்கப்பட்ட தொகையைத் தாமே ஏற்றுக்கொள்வதற்கும் தீர்மானித்திருக்கின்றது.

மத்திய வங்கியின் நாணயச்சபையினால் 'உள்முக தொழிலாளர் பணவனுப்பல்கள் மீதான ஊக்குவிப்புத்திட்டத்தின்' கீழ் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களால் அனுப்பப்படுகின்ற பணம் இலங்கை ரூபாவாக மாற்றப்படும்போது அதற்கான ஊக்குவிப்புத்தொகையாக ஏற்கனவே ஒரு அமெரிக்க டொலருக்கு 2 ரூபா வீதம் வழங்கப்பட்டுவந்தது.

இவ்வாறு ஏற்கனவே வழங்கப்பட்டுவந்த 2 ரூபாவிற்கு மேலதிகமாக கடந்த முதலாம் திகதியிலிருந்து எதிர்வரும் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏனைய வழிமுறைகள் ஊடாக வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனுப்புகின்ற பணம் இலங்கை ரூபாவாக மாற்றப்படும்போது ஒரு அமெரிக்க டொலருக்கான ஊக்குவிப்புத்தொகையாக 8 ரூபாவை வழங்குவதற்கு நாணயச்சபையினால் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி இதுவரையான காலத்தில் (டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து) வெளிநாடுகளில் பணிபுரிவோரால் அனுப்பப்பட்ட பணம் இலங்கை ரூபாவாக மாற்றப்பட்டபோது ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் 2 ரூபாவிற்கு மேலதிகமாக, புதிதாக வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்ட 8 ரூபாவையும் சேர்ந்து அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ஊக்குவிப்புத்தொகையாக 10 ரூபாவை மத்திய வங்கி கொடுப்பனவு செய்துவந்தது.

இவ்வாறு மேலதிக ஊக்குவிப்புத்தொகையை வழங்குவதன் மூலம் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் எமது நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அளவை அதிகரிக்க முடிவதுடன் அதனூடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செலாவணிச்சந்தையின் திரவத்தன்மையினை உயர்த்தமுடியும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் மேற்படி ஊக்குவிப்புத்தொகையை வழங்குவதற்கான அறிவிப்பைத் தொடர்ந்து வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பணவனுப்பல்களில் சிறந்த முன்னேற்றம் தென்படுவதனால், அதனை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

அதுமாத்திரமன்றி வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் பணப்பரிமாற்று நிலையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் ஊடாக இலங்கைக்குப் பணம் அனுப்பும்போது, அவர்களுக்கு ஏற்படுகின்ற பரிமாற்றல் செலவில் வரையறுக்கப்பட்ட தொகையைத் தாமே ஏற்றுக்கொள்வதற்கும் மத்திய வங்கி தீர்மானித்திருப்பதுடன் இதுபற்றி மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

அதன்மூலம் வெளிநாடுகளில் பணிபுரியும் பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் எவ்வித செலவுமின்றியோ அல்லது குறைந்த செலவிலோ நாட்டிற்குப் பணத்தை அனுப்பமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02