இன்று தீர்வின்றேல் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு - புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம்

Published By: Digital Desk 3

25 Dec, 2021 | 10:34 AM
image

(இராஜதுரை ஹஷான்)

போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.  முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு இன்று தீர்வு வழங்காவிடின் நாளை நள்ளிரவு முதல் முழுமையான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

பதவி உயர்வு,சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் கடந்த இரண்டு நாட்களாக  புகையிரத பொதி சேவை விநியோகம் புகையிரத சாதாரண பயணச்சீட்டு விநியோகம் ஆகிய கடமைகளில் இருந்து விலகியுள்ளார்கள்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து போக்குவரத்து துறை அமைச்சின் செயலாளர் தலைமையில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சின் காரியாலயத்தில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளர தம்மிக ஜயசுந்தர,புகையிரத நிலைய பொறுத்திகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

இப்பேச்சுவார்த்தையினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை புகையிரத திணைக்களத்துடன் ஒன்றினைந்து பேச்சுவார்த்தை ஊடாக எடுத்துக் கொள்ள முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளோம்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் பதவி உயர்வு,இடமாற்றம் ஆகிய விடயங்களில் புகையிரத திணைக்களம் முறையாக செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொது பயணிகளின் நலனை முன்னிட்டு விசேட புகையிரத சேவையினை புகையிரத திணைக்களம் இதுவரையில் முன்னெடுக்கவில்லை.

பொது மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு சாதாரன புகையிரத பற்றுச்சீட்டு விநியோகத்தில் இருந்து விலகியுள்ளோம். இதனால் ஏற்படும் நிதி நெருக்கடிக்கு புகையிரத திணைக்களம் பொறுப்பு கூற வேண்டும். முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க புகையிரத திணைக்களம் இணக்கம் தெரிவிக்காத காரணத்தினால் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல தீர்மானித்துள்ளோம்.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு இன்று தீர்வு பெற்றுக் கொடுக்காவிடின் நாளை நள்ளிரவு முதல் முழுமையான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58