மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு புதிய நீதியரசர்

Published By: Vishnu

24 Dec, 2021 | 03:32 PM
image

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக விக்கும் அதுல களுஆரச்சி சத்தியப்பிரமாணம் ‍மேற்கொண்டுள்ளார்.

May be an image of 2 people, people standing and indoor

அவர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமணம் செய்து கொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தேவிகா அபேரத்ன, ஓய்வுபெற்றுச் செல்லும் நிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே விக்கும் அதுல களுஆரச்சி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், கொழும்பு சட்டக் கல்லூரியில் கல்வி கற்று, சட்டுத்துறைக்குப் பிரவேசித்தவராவார்.

விக்கும் அதுல களுஆரச்சி அவர்களின் 33 வருடகால சேவையில் 27 வருடங்களாக நீதவானாகவும், மாவட்ட நீதிபதியாகவும், குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார்.

அவர், மேல் நீதிமன்றத்தின் முன்னாள் சிரேஷ்ட நீதிபதியாகவும் கடமையாற்றியவராவார். 

ஜனாதிபதி முன்னிலையில் இடம்பெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வில், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

May be an image of 3 people, people standing and indoor

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04