ஆபாசப்படத்தில் நடித்துள்ள டொனால்ட் டிரம்ப் : வெளியான புதிய தகவல் (வீடியோ இணைப்பு)

02 Oct, 2016 | 09:35 AM
image

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் ஆபாசப்படத்தில் நடித்துள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவலால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரை பற்றி ஒவ்வொரு நாளும் புதிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் பற்றி தற்போது வெளியாகியுள்ள தகவல் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டில் வெளியான ஆபாசப்படமொன்றில் டொனால்ட் டிரம்ப் நடித்துள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பெண்கள் மற்றும் ஆண்கள் நிர்வாணமாக நடித்த அந்த படத்தில் உடலுறவு காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றன.

வீடியோ சென்டர்போல்ட் என்ற பெயருடைய குறித்த ஆபாசப்படத்தில் தோன்றும் ஆண்களில் ஒருவராக டொனால்ட் டிரம்ப் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

நியூயோர்க் நகரில் எடுக்கப்பட்ட அந்த படத்தில் ஆண்களுடன் தோன்றும் டொனால்ட் டிரம்ப் ஒரு விலையுயர்ந்த மது போட்டிலை திறந்து அதில் இருந்து வெளியேறும் நுரையை ஆண்கள் மீது தெளிப்பதாக காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

ஹிலாரி கிளண்டனுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் முன்னாள் உலக அழகியான அலிசியா மஜாடோ  என்பவர் ஆபாசப்படத்தில் முன்பு நடித்துள்ளார் என டொனால்ட் டிரம்ப் சில தினங்களுக்கு முன்னர் விமர்சனத்தை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட அந்த ஆபாசப்படத்தில் டொனால்ட் டிரம்ப் நடித்துள்ள காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08