இலங்கை பெண்ணுக்கு குவைத்தில் மரண தண்டனை என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது - வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

Published By: Digital Desk 4

24 Dec, 2021 | 06:43 PM
image

(எம்.மனோசித்ரா)

குவைத்தில் இலங்கை பெண்ணொருவருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு ! | Virakesari.lk

இவ்வாறு தகவல்கள் வெளியானதையடுத்து குவைத் பொலிஸாரின் உதவியுடன் அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளால் அப்பெண் பாதுகாப்பாக நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை பிரஜையான கிருஷ்ணன் சிறியானி சந்திரலதா என்ற பெண் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளி தொடர்பில் குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் கடந்த 21 ஆம் திகதி குவைத் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதோடு , சந்திரலதாவின் நிலைமை தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவர் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தை கண்டு பிடிப்பதற்கும் அவர்களது ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய குவைத் பொலிஸாரின் ஒத்துழைப்பிற்கமைய , அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளால் சந்திரலதா பணிபுரிந்த இடம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அவர் கடந்த 22 ஆம் திகதி குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சந்திரலதா பணிபுரியும் வீட்டு உரிமையாளர்கள் அவரின் இலங்கை பயணத்தை தாமதப்படுத்தியமையால் , நாடு திரும்புவதற்காக அவர் தனது பிள்ளைகளிடம் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தான் பணி புரிந்த வீட்டு உரிமையாளர்கள் தனக்கு உரிய நேரத்தில் சம்பளத்தை வழங்கியதாகவும் , அவர்களால் எவ்விதத்திலும் தான் அச்சுறுத்தலுக்கோ அல்லது துன்புறுத்தலுக்கோ உள்ளாக்கப்படவில்லை என்றும் சந்திரலதா உறுதிப்படுத்தியுள்ளார்.

குவைத் அதிகாரிகள் இந்த விசாரணையை நிறைவு செய்ததையடுத்து , சந்திரலதா மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக அங்குள்ள தூதரகம் ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58