19 வயதின் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட்: இலங்கைக்கு அமோக வெற்றி

Published By: Vishnu

24 Dec, 2021 | 10:25 AM
image

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்று ஆரம்பமான 19 வயதுக்குட்டவர்களுக்கான ஆசிய கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை தனது முதலாவது ஆட்டத்தில் குவைத்தை 274 ஓட்டங்களால் அமோக வெற்றிகொண்டது.

Image

8 நாடுகள் பங்குபற்றும் இந்த சுற்றுப் போட்டியில் பி குழுவில் இலங்கை, குவைத், பங்களாதேஷ், நேபாளம் ஆகியனவும் ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியனவும் பங்குபற்றுகின்றன.

குவைத்துக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 323 ஓட்டங்களைக் குவித்தது.

சமிந்து விக்ரமசிங்க, ஷெவொன் டெனியல் ஆகிய இருவரும் தலா 54 ஓட்டங்களைப் பெற்றதுடன் 1 ஆவது விக்கெட்டில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

3 ஆம் இலக்க வீரர் சதிஷ ராஜபக்ச 35 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன் பின்னர் 4 ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த பவன் பத்திராஜா (86), ரனுது சோமரட்ன (60 ஆ.இ.) ஆகிய இருவரும் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை இளையோர் அணியைப் பலப்படுத்தினர்.

குவைத் பந்துவீச்சில் ஸீஷான் அஸீம் 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹாபியர் அலி 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குவைத் 17.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 49 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை பந்துவீச்சில் அணித் தலைவர் துனித் வெல்லாலகே 2 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் சதிஷ ராஜபக்ச 4 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்;களையும் மதீஷ பத்திரண 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகனாக பவன் பத்திராஜா தெரிவானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20