சஜித்தே பொருத்தமான மாற்றுத்தலைவர் என்பதை இந்தியாவும் சீனாவும் ஏற்றுக்கொண்டுள்ளன - அசோக அபேசிங்க

Published By: Digital Desk 3

24 Dec, 2021 | 10:48 AM
image

(நா.தனுஜா)

நாட்டுமக்களை மிகமோசமான நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும் தற்போதைய அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கவிழ்த்து, சஜித் பிரேமதாஸ தலைமையிலான மனிதநேய அரசாங்கத்தை பதவியில் அமர்த்தவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. இந்நாட்டிற்குப் பொருத்தமான ஒரேயொரு மாற்றுத்தலைவர் சஜித் பிரேமதாஸவே என்பதை உலகத்தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அதன் காரணமாகவே எதிர்க்கட்சியின் 'ஜனசுவய' செயற்திட்டத்திற்கு அவசியமான நிதியுதவியை சீனா வழங்கியிருக்கின்றது. அதேபோன்று நிதியமைச்சர் இந்தியாவிற்குச்சென்று கடனுதவி வழங்குமாறு கோரியதன் பின்னர், கடனுதவி வழங்குவது ஏற்புடையதா? இல்லையா? என்று இந்தியா எதிர்க்கட்சித்தலைவரிடம் கேட்கின்றது. 

ஆகவே சஜித் பிரேமதாஸ தலைமையில் அடுத்த அரசாங்கம் ஆட்சியமைக்கப்போகின்றது என்பதை அவர்களனைவரும் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

சுபீட்சமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய அரசாங்கம், தற்போது அதன் தூரநோக்கற்ற தீர்மானங்களாலும் செயற்திறனற்ற நிர்வாகத்தினாலும் நாட்டுமக்களை மிகமோசமான நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது. 

அரசாங்கத்தின் திறனற்ற நிதிக்கொள்கையின் விளைவாக நாட்டின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சியேற்பட்டதுடன் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்கள் கடன் மீள்செலுத்துகை ஆற்றலின் அடிப்படையில் எமது நாட்டைத் தரமிறக்கியிருக்கின்றன. வெளிநாட்டு முதலீடுகள் வீழ்ச்சியடைந்திருப்பதுடன் வருமான இழப்பினால் சுமார் 6 இலட்சம் குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. 

ஏற்கனவே அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றத்தினால் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த மக்கள், தற்போது இரண்டாவது தடவையாகவும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டில் பயன்படுத்தப்படும் பதிவுசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை சுமார் 33 இலட்சமாகும். அதன் உரிமையாளர்கள் நாளொன்றுக்கு 2 அல்லது 3 லீற்றர் பெற்றோலை கொள்வனவு செய்தால்கூட வழமையை விடவும் 50 - 60 ரூபாவை மேலதிகமாக செலவிடவேண்டியேற்படும். 

அதேபோன்று 12 இலட்சம் முச்சக்கரவண்டிகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதுடன் நாளாந்தம் சுமார் 8 இலட்சம் முச்சக்கரவண்டிகள் வீதிகளில் பயணிக்கின்றன. முச்சக்கரவண்டி சாரதிகள் நாளொன்றுக்கு 5 லீற்றர் எரிபொருளைப் பயன்படுத்துவதற்கு 100 ரூபாவை மேலதிகமாக செலவிடவேண்டும். பதிவுசெய்யப்பட்டுள்ள 8 இலட்சத்து 50 ஆயிரம் சிறிய ரக மோட்டார் வாகனங்களில் 7 இலட்சம் வாகனங்கள் தினமும் வீதிகளில் பயணிக்கின்றன. 

சுமார் 45 ஆயிரம் பேரூந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்கின்றன. எனவே எரிபொருள் விலையேற்றத்தினால் நாட்டுமக்கள் அனைவரும் நேரடியாகவும் மறைமுகமான வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இவ்வாறிருக்க இன்னும் சிலமாதங்களில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

டொலர் பற்றாக்குறை காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்யமுடியாது என்றும் போக்குவரத்து சாதனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காகவும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. அவ்வாறெனின் மக்கள் எங்கும் பயணிக்காமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கவேண்டுமா?

அதேபோன்று நாடளாவிய ரீதியில் பதிவான எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்களால் பெருமளவான சொத்துக்கள் சேதமடைந்திருப்பதுடன் பெண்ணொருவர் உயிரிழந்திருக்கின்றார். மேலும் பலர் காயமடைந்திருக்கின்றார்கள். ஆனால் இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. 

எரிவாயு கலவையில் மாற்றம் செய்யப்பட்டமையினை சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனம் ஏற்றுக்கொண்டதன் பின்னரும் தற்போதுவரை குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படாததன் காரணம் என்ன? அந்நிறுவனத்தின் தலைவர் ஏன் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை? இவ்விடயத்தில் ஜனாதிபதி மௌனம்சாதிப்பது ஏன்? தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக்கூறி ஆட்சிபீடமேறியவர்கள் தற்போது வீடுகளுக்குள் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியிருக்கின்றார்கள்.

அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளால் இன்றளவில் மக்கள் வாழமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே வெகுவிரைவில் இந்த அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கவிழ்த்து, சஜித் பிரேமதாஸ தலைமையிலான மனிதநேய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் மக்கள் அனைவரும் ஒன்றுதிரள்வார்கள் என்று நம்புகின்றோம். இந்நாட்டிற்குப் பொருத்தமான ஒரேயொரு மாற்றுத்தலைவர் சஜித் பிரேமதாஸவே என்பதை உலகத்தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். 

சர்வதேச நாடுகள் அரசாங்கத்தை நம்பவில்லை. ஆகையினாலேயே அரசாங்கத்திற்குக் கடன் வழங்காமல், எதிர்க்கட்சியின் 'ஜனசுவய' செயற்திட்டத்திற்கு அவசியமான நிதியுதவியை சீனா நன்கொடையாக வழங்கியது.

அதேபோன்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்குச்சென்று கடனுதவி வழங்குமாறு கோரிக்கைவிடுத்தார். ஆனால் இலங்கைக்குக் கடன் வழங்குவது ஏற்புடையதா? இல்லையா? என்று இந்திய அரசாங்கம் எதிர்க்கட்சித்தலைவரிடம் கேட்கின்றது. 

ஆகவே ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாஸ தலைமையில் அடுத்த அரசாங்கம் ஆட்சியமைக்கப்போகின்றது என்பதை அவர்களனைவரும் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்றே தோன்றுகிறது என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24