பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமை ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடு - அனுர பிரியதர்ஷன யாப்பா

Published By: Digital Desk 4

23 Dec, 2021 | 09:46 PM
image

(ஆர்.யசி)

நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக எந்தவித காரணமும் இல்லாது ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க முடியாது.

ஆகவே பாராளுமன்றத்தை ஒத்திவைத்தது ஏன் என்பதை ஜனாதிபதியோ அல்லது அமைச்சரவை ஊடகப்பேச்சாளரோ பிரதமரோ தெளிவுபடுத்த வேண்டும் என ஆளுங்கட்சி சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இக்கட்டான சூழ்நிலையில் ஜனாதிபதி அவசரப்பட்டு பாராளுமன்றத்தை ஒத்திவைத்துவிட்டார் என்பதுடன் இது ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடென தாம் கருதுவதாகவும் அவர் கூறினார்.  

பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபையே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு  பிரதான காரணம் -அனுர பிரியதர்ஷன யாப்பா | Virakesari.lk

நாட்டின் நிதி நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

சகல விதத்திலும் நாட்டில் பிரச்சினைகள் உருப்பெற்றுக்கொண்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளமை மிக மோசமான தீர்மானமாகும்.

அதிகாரத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டால் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க முடியும். இப்போது அவ்வாறான அவசியம் ஒன்று இல்லை.

எனவே தற்போது பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததன் மூலம் ஜனாதிபதி அவசரப்பட்டு தீர்மானம் எடுத்துவிட்டார் என்பது மாத்திரமன்றி இந்த செயற்பாடு ஜனநாயகத்திற்கு முரணானதாகவே அமைந்துள்ளது என நான் கருதுகின்றேன். 

அதேபோல் அரசாங்கத்திற்கு இது நல்ல பயணமாக அமையாது என்பதையும் எச்சரிக்கின்றேன். அதுமட்டுமல்ல பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததற்கான காரணம் என்ன என்பதை ஜனாதிபதியோ அல்லது அமைச்சரவை ஊடகப்பேச்சாளரோ பிரதமரோ தெளிவுபடுத்த வேண்டும்.

ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக அவ்வாறு பாராளுமன்றத்தில் கலைக்க முடியாது. அதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும். அதனை தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்க தலைமைகளின் கடமையாகும்.

மேலும், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுகின்றது என்றால் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டிய பிரதமர் முறைமையை உருவாக வேண்டியது அவசியமாகும்.

இப்போதும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையுடன் அவசியமான பல துறைகள் முடக்கப்பட்டுள்ளன. இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவிற்கு எதிராக நாம் முன்வைக்கும் விமர்சனம் அல்ல, நிறைவேற்று ஜனாதிபதிகள் சகலரும் இந்த தவறை செய்துள்ளனர்.

நிறைவேற்று அதிகாரம் நாட்டில் ஜனநாயகத்தை மீறிய தனி அரசாங்கமொன்ரையே கொண்டு நடத்திச்செல்லும். இதுவும் காலாகாலமாக இடம்பெற்று வருகின்ற தவறு என்றே நாம் கருதுகின்றோம்.

ஒரு குழுவிற்கு ஆட்சியை கொடுத்து ஜனநாயகத்தை நாசமாக்க முடியாது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தியதன் விளைவாகவே இன்று நாம் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். எனவே இதில் உடனடியாக மாற்றங்களை செய்தாக வேண்டியுள்ளது.

ஆகவே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் வேளையில் முதலில் பாராளுமன்றத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

நாளுக்கு நாள் நாம் பின்னோக்கி செல்ல முடியாது, ஒரு தரப்பை சுற்றி அரசாங்கத்தை உருவாக்க முடியாது, எனவே உடனடியாக மறுசீரமைப்பு அவசியம் என்பதே எமது நிலைப்பாடு.

அதேபோல் இப்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி நிலைமையில் அடுத்த கட்டத்தில் அரசியலில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படும் சூழலே காணப்படுகின்றது. ஆனால் இது ஆரோக்கியமான விதத்தில் அமையுமா அல்லது மோசமான மாற்றமாக அமையுமா என்பது அவதானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்  என்பதை மட்டுமே இப்போது எம்மால் கூற முடியும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58