சந்தையில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் மரக்கறிகளின் விலைகள்

Published By: Vishnu

23 Dec, 2021 | 08:33 PM
image

(நா.தனுஜா)

உரத்தட்டுப்பாடு காரணமாக விவசாய உற்பத்திகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மரக்கறிகளின் சந்தை விலைகளில் மிகையானதும் சடுதியானதுமான அதிகரிப்பு ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளது. 

குறிப்பாக புறக்கோட்டை, தம்புள்ளை மற்றும் நாரஹென்பிட்டி சந்தைகளில் போஞ்சி, கரட், தக்காளி, கத்தரி, பூசணி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், உருளைக்கிழக்கு உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இம் மாதம் 50 - 250 ரூபாவினால் அதிகரித்துள்ளன.

 அரசாங்கத்தினால் கடந்த ஏப்ரல் மாதம் இரசாயன உர இறக்குமதியை நிறுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, நாட்டின் தேசிய உணவு உற்பத்திக்கு அவசியமான உரத்திற்குப் பாரிய பற்றாக்குறை ஏற்பட்டது. 

உள்நாட்டிலேயே சேதன உரத்தைத் தயாரிக்கப்போவதாக அரசாங்கம் கூறியபோதிலும், அதற்குரிய முறையான செயற்திட்டங்கள் எவையும் வகுக்கப்படவில்லை.

 நாடளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் உரப்பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் தற்போதுவரை உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாததன் காரணமாக விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

அதன் விளைவாக நாட்டின் தேசிய உணவு உற்பத்தி வீழ்ச்சியடைந்திருப்பதுடன் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் பெருமளவால் அதிகரித்துள்ளன.

 அதன்படி புறக்கோட்டை, தம்புள்ளை மற்றும் நாரஹென்பிட்டி சந்தைகளில் கடந்த மாதம் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்ட விலைகளுடன் ஒப்பிடுகையில் இம்மாதம் அவற்றின் விலைகள் 50 - 250 ரூபாவினால் அதிகரித்திருக்கின்றன.

 குறிப்பாக புறக்கோட்டை சந்தையில் மரக்கறிகளின் சில்லறை விலைகளைப் பொறுத்தமட்டில் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதி ஒரு கிலோகிராம் போஞ்சி, கரட், தக்காளி, கத்தரி, பூசணி, புடலங்காய், பச்சைமிளகாய், பெரிய வெங்காயம், உருளைக்கிழக்கு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றின் விலைகள் முறையே 400 ரூபா, 350 ரூபா, 300 ரூபா, 250 ரூபா, 75 ரூபா, 250 ரூபா, 200 ரூபா, 165 ரூபா, 220 ரூபா, 550 ரூபாவாகக் காணப்பட்டபோதிலும் இம்மாதம் 22 ஆம் திகதி (நேற்று ) அவற்றின் விலைகள் முறையே 475 ரூபா, 425 ரூபா, 330 ரூபா, 390 ரூபா, 80 ரூபா, 300 ரூபா, 750 ரூபா, 238 ரூபா, 275 ரூபா, 790 ரூபாவாக அதிகரித்துள்ளன.

 அதேபோன்று தம்புள்ளை சந்தையில் மரக்கறிகளின் சில்லறை விலைகளை ஆராய்ந்து பார்க்குமிடத்து கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதி ஒரு கிலோகிராம் போஞ்சி, கரட், தக்காளி, கத்தரி, பூசணி, புடலங்காய், பச்சைமிளகாய், பெரிய வெங்காயம், உருளைக்கிழக்கு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றின் விலைகள் முறையே 350 ரூபா, 315 ரூபா, 315 ரூபா, 245 ரூபா, 58 ரூபா, 255 ரூபா, 185 ரூபா, 168 ரூபா, 208 ரூபா, 528 ரூபாவாகக் காணப்பட்டபோதிலும் இம்மாதம் 22 ஆம் திகதி (நேற்று முன்தினம்) அவற்றின் விலைகள் முறையே 375 ரூபா, 415 ரூபா, 320 ரூபா, 295 ரூபா, 95 ரூபா, 275 ரூபா, 715 ரூபா, 235 ரூபா, 258 ரூபா, 548 ரூபாவாக அதிகரித்துள்ளன.

 இம்மரக்கறிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட விலைகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய விலைகளில் மிதமிஞ்சிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.  

புறக்கோட்டை சந்தையில் ஆறு மாதங்களுக்கு முன்னர் கடந்த ஜுன் 22 ஆம் திகதி மரக்கறிகளின் சில்லறை விற்பனை விலைகளை நோக்குகையில் ஒருகிலோ போஞ்சி 320 ரூபா, கரட் 180 ரூபா, தக்காளி 140 ரூபா, கத்தரி 160 ரூபா, பூசணி 90 ரூபா, புடலங்காய் 180 ரூபா, பச்சை மிளகாய் 300 ரூபா, பெரிய வெங்காயம் 95 ரூபா, உருளைக்கிழங்கு 140 ரூபா மற்றும் காய்ந்த மிளகாய் 530 ரூபாவாகப் பதிவாகியிருந்தன.

 இவ்வாறானதொரு பின்னணியில் மரக்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலையுயர்வினால் கடந்த அக்டோபர் மாதத்தில் 11.7 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப்பணவீக்கம் கடந்த நவம்பர் மாதத்தில் 16.9 சதவீதமாக உயர்வடைந்ததுடன் அதன் விளைவாக கடந்த மாதத்திற்கான தேசிய பணவீக்கம் 11.1 சதவீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27