பெரும்போகத்தில் 70 முதல் 75 சதவீத விளைச்சல் கிடைக்கப்பெறும் - விவசாயத்துறை அதிகாரிகள்

Published By: Vishnu

23 Dec, 2021 | 08:14 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பெரும்போகத்தில் நெற்செய்கைக்காக பயன்படுத்தக் கூடிய மொத்த வயல் நிலங்களில் 90 சதவீதம் தொடக்கம் 95 சதவீதமளவிலான வயல் நிலங்களில் நெற்செய்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

அதனால் கடந்த பெரும்போகத்தில் கிடைக்கப் பெற்ற விளைச்சளை போன்று இம்முறை 70 சதவீதம் தொடக்கம் 75 சதவீதம் வரையிலான விளைச்சல் கிடைக்கப் பெறும் என விவசாயத்துறை அதிகாரிகள் அமைச்சரிடம் குறிப்பிட்டனர்.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ,விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற மீளாய்வு கூட்டத்தில் சகல மாவட்டங்களிலும் உள்ள விவசாயத்துறை அதிகாரிகள்,விவசாய அபிவிருத்தி பிரதி ஆணையாளர்,மாவட்ட உர பணிப்பாளர்கள், மாவட்ட விவசாய பணிப்பாளர்கள் ஆகியார் கலந்துக் கொண்டனர்.

பெரும் போகத்தில் விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ள வயல் நிலங்கள், கிடைக்கப் பெறும் விளைச்சல், உர விநியோகம், உர பாவனை தொடர்பில் மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் மீளாய்வு கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்டன.

தேசிய மட்டத்திலான உர நிறுவனங்களுடன் செய்துக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களுக்கமைய அந்நிறுவனங்கள் செயற்படுகிறதா என்பது தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாயத்துறை அமைச்சர் விவசாயத்துறை அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

பெரும்போகத்தில் உர உற்பத்தி, உர விநியோகத்தில் காணப்படும் குறைப்பாடுகளை இனங்கண்டு சிறுபோகத்தில் அதனை நிவர்த்தி செய்யுமாறு அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

பல் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பெரும்போகத்தில் நெற் பயிர்ச்செய்கையும்,ஏனைய பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

எதிர்வரும் சிறுபோகத்தில் நெற்பயிர்ச்செய்கைக்கு தேவையான முழுமையான உர பொதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சேதன பசளை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஒரு சில பகுதிகளில் உர வியாபாரத்தில் கறுப்பு சந்தை தோற்றம் பெற்றுள்ளன.

சேதன பசளை உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மூல பொருட்களின் விலை கடந்த காலங்களை காட்டிலும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.

சேதன பசளை தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும்,ஊடகங்களிலும் வெளியாகியுள்ள தவறான செய்திகளினால் விவசாயிகள் சேதன பசளை பாவனையில் இருந்து விலகியுள்ளதாக அதிகாரிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்கள்.

பதுள்ளை, நுவரெலியா ஆகிய பகுதிகளில் மரகறி பயிர்ச்செய்கையில் ஈடுப்படும் பிரதான விவசாயிகளின் விவசாய நடவடிக்கைளுக்கு தேவையான உரத்தை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மரக்கறி விவசாயத்திற்கு தேவையான உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43