விலை அதிகரிப்பிற்கு எதிராக வலி. மேற்கு பிரதேச சபையில் போராட்டம் 

Published By: Digital Desk 4

23 Dec, 2021 | 07:24 PM
image

தற்போது நிலவுகின்ற பொருட்களின் விலைவாசி அதிகரிப்பிற்கு எதிராக வலி.மேற்கு பிரதேச சபைக்கு வெளியே, சபையின் உறுப்பினர்களால் இன்று  போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வலி. மேற்கு பிரதேச சபையின் 46 ஆவது பொதுக்கூட்டம் இன்று உப தவிசாளர் சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது சபையின் உறுப்பினர்களது கோரிக்கைக்கு அமைவாக இந்த போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

போராட்டக்காரர்கள் ” இன்னொரு சோமாலியா போன்று இலங்கையை மாற்றாதே, அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்காதே, நாங்கள் என்ன நாட்டினை விட்டு வெளியேறுவதா, வீடுகளில் குண்டுகளை வெடிக்க வைக்காதே, எரிபொருட்களின் விலையேற்றத்தை குறை, அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையை குறை, போன்ற கோசங்களை எழுப்பியும், பதாகைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேட்சைக்குழு ஆகியன பங்குபற்றின. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52