விலை அதிகரிப்பைத் தவிர மாற்று வழியில்லை : நாட்டு மக்களை ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள்

Published By: Digital Desk 3

23 Dec, 2021 | 08:25 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அத்தியாவசிய பொருட்களின் விலையினை அதிகரிப்பதை தவிர வேறு மாற்று வழி ஏதும் கிடையாது.

எதிர்வரும் நாட்களிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க கூடும். தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்க நாட்டு மக்களும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

குருநாகல் பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் விலையேற்றம் தற்போது எதிர்தரப்பினரது பிரதான அரசியல் பிரசாரமாக காணப்படுகிறது. உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட போதும் மக்களுக்கு நிவாரண அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.

எரிபொருளின் விலையை அதிகரிப்பதை தவிர மாற்று வழி இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டது.

அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிப்பதை தவிர மாற்று வழிமுறைகள் ஏதும் தற்போது கிடையாது. எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்க கூடும். 

அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மக்களின் வரி பணத்தின் ஊடாக அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகிறது. நாடு பொருளாதார மட்டத்தில் வீழ்ச்சியடைவதாக எதிர் தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் ஆட்சி மாற்றம் ஏற்படாது.

எதிர்வரும் காலங்களில் அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்களை சிறந்த முறையில் தற்போது வகுத்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21