2021 இறுதிக்குள் உத்தியோகபூர்வ கையிருப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இருக்கும் - மத்திய வங்கி

Published By: Vishnu

23 Dec, 2021 | 10:07 AM
image

2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உத்தியோகபூர்வ கையிருப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வழிமுறைகள் 2021 இறுதியளவில் அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 3 பில்லியனிற்கு மேலாகக் காணப்படுவதனை உறுதிப்படுத்தும் என்பதனை இலங்கை மத்திய வங்கியானது பொது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது. 

கொவிட்-19 நோய்த்தொற்றின் பொருளாதாரத் தாக்கத்தினால் ஏற்பட்ட சிக்கல்களுக்கும் வெளிநாட்டுத் துறையின் பாதகமான அபிவிருத்திகளினால் ஏற்படுத்தப்பட்ட சவால்களுக்கும் மத்தியில் இலங்கைப் பொருளாதாரம் 2021 ஆண்டு முழுவதும் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினைக் காண்பித்தது. 

நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் கொடுப்பனவு உள்ளடங்கலாக வெளிநாட்டுக் கடன்களை மீள்செலுத்துவதன் ஊடாக இலங்கை அதன் படுகடன் கடப்பாடுகளையும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது. 

தற்போதுள்ள வெளிநாட்டுப் படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் முறையொன்றில் முகாமைத்துவம் செய்வதற்கு ஆண்டின் ஆரம்பத்திலிருந்து படுகடனல்லாத பாய்ச்சல்களை ஊக்குவிப்பது தொடர்பில் வலியுறுத்துவதுடன் அலுவல்சார் ஒதுக்குகளை குறைநிரப்புவதற்கான சாத்தியமான வழிமுறைகளை வினைத்திறனாகக் கண்டறிவதில் மத்திய வங்கியும் அரசாங்கமும தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளன. 

குறுங்காலத்தில் அலுவல்சார் ஒதுக்குகளை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்க்கப்படும் இலக்குகளை நிர்ணயிக்கின்ற பேரண்டப்பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டலின் அறிவிப்புடன் 2021 ஒக்டோபர் தொடக்கம் இம்முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டிருந்தன.

ஆறு மாதகால வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டவாறு அண்மிய குறுங்காலத்தில் அநேகமான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மத்திய கிழக்கு மற்றும் ஏனைய பிராந்திய மத்திய வங்கிகளுடனான பரஸ்பர பரிமாற்றல் வசதிகள் உள்ளடங்கலாக மத்திய வங்கிக்கான முக்கிய வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்கள் ஏறத்தாழ 2.0 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியாகக் காணப்படுகின்றன. 

அரசாங்கத்திலிருந்து அரசாங்கத்திற்கான நிதியிடல், கூட்டுக்கடன்கள் அதேபோன்று பல்புடை அமைப்புக்களிலிருந்தான கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இதற்குப் புறம்பாக, அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட உயர்மட்ட வெளிநாட்டு விஜயங்களின் போது பேச்சுவார்த்தைக்குட்பட்ட எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டுச் செலாவணி வசதிகளும் சிறப்பாக முன்னேற்றங்கண்டு வருகின்றன. 

மேலும், தொழிலாளர் பணவனுப்பல்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஊக்குவிப்புத் திட்டம் மற்றும் ஏற்றுமதிப் பெறுகைகள் தொடர்பிலான மீளனுப்பல் மற்றும் மாற்றல் தேவைப்பாடுகள் போன்ற வெளிநாட்டுச் செலாவணியின் பன்முகக் கூறுகள் மீது மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் உள்நாட்டுச் சந்தையில் திரவத்தன்மையினை மேம்படுத்துவதன் மூலம் அலுவல்சார் ஒதுக்குகளை மேலும் கட்டியெழுப்புவதற்கு மத்திய வங்கியினை இயலச்செய்கின்றன. 

வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்களுக்கான புறப்படுகைகளில் அண்மைய அதிகரிப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகைகளில் அவதானிக்கப்பட்ட துரித வளர்ச்சி என்பவற்றுடன் வெளிநாட்டுத் துறையானது எதிர்வரும் காலப்பகுதியில் சிறப்பான முறையில் மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுவதுடன் தற்போது அவதானிக்கப்பட்டுள்ள அழுத்தங்கள் பொருளாதாரத்திற்கான அதிகரித்த உட்பாய்ச்சல்களுடன் மிதமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

இத்தகைய எதிர்பார்க்கப்பட்ட உட்பாய்ச்சல்கள் பொருண்மியமாவதுடன் ஒதுக்கு நிலைமையானது 2022 ஆம் ஆண்டு முழுவதிலும் போதியளவு மட்டங்களில் காணப்படுமென அரசாங்கமும் மத்திய வங்கியும் தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58