எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்திடமிருந்து மேலும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு

Published By: Vishnu

23 Dec, 2021 | 07:28 AM
image

கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் கடலில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம் உடன்பாட்டிற்கு அமைவாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை காப்பீடாக செலுத்த உடன்பட்டுள்ளது. 

குறித்த பணம் இன்னும் சில நாட்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் திருமதி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து இடம்பெற்ற ஜூன் மாதம் 31 ஆம் திகதி முதல் மாசடைந்த கடல் மற்றும் கடலோர பகுதியை சுத்தம் செய்வதற்காக மாத்திரம் குறித்த பணம் செலவிடப்படவிருப்பதாக சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் குறிப்பிட்டார்.

3.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக கோரிய போதிலும் 2.5 மில்லியன் டொலர்கள் மாத்திரமே இழப்பீடாக வழங்குவதற்கு கப்பல் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

மீதமுள்ள பணத்தை பெறுவதற்கு ஆவணங்கள் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் கூறியுள்ளார். இதற்கு முன் 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடாக பெறப்பட்டது.

இந்த கப்பல் தீ விபத்தினால் ஏற்பட்ட கடல்சார் சூழல்  மாசுப்பாட்டை கட்டுப்படுத்தும் செலவுகள் மற்றும் மீனவர்களுக்கு ஏற்பட்ட நேரடி மற்றும் மறைமுக சேதங்களுக்கு மீன்பிடி திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக கப்பல் நிறுவனம் குறித்த தொகையை வழங்கியுள்ளது.

நவம்பர் 1 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் இதுதொடர்பில் ஏற்பட்ட செலவீனங்களுக்கு மூன்றாவது காப்பீட்டு உரிமையை கோருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் தர்ஷனி லஹந்தபுர குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 20:50:15
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03