எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஒப்புவித்தால் மறுதினமே பதவி விலகுவேன் - சுகாதார அமைச்சர் கெஹலிய சவால் 

Published By: Digital Desk 4

22 Dec, 2021 | 09:13 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பது போல் நான் ஒருபோதும் சுகாதார ஊழியர்களின் நடவடிக்கைகளில் தலையிட்டதும் இல்லை. அவர்களின் கடமை நடவடிக்கைகளை அரசியலாக்க நடவடிக்கை எடுத்ததும் இல்லை.

அவ்வாறு அவர்களின் விடயங்களில்  நான் தலையிட்டிருப்பதை ஒப்புவித்தால் அமைச்சுப்பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொவிட் கட்டுப்பாட்டு செயற்பாடுகளுக்காக மொத்தமாக 113 பில்லியன் ரூபா செலவு - கெஹலிய  ரம்புக்வெல | Virakesari.lk

காலி கராபிடிய பெண்கள் வைத்தியசாலைக்கு புதன்கிழமை (22) காண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுவட்டு வருகின்றனர். நான் அவர்களது கடமைகளில் அரசியல் ரீதியில் தலையீடு செய்வதில்லை என உத்தரவாதம் வழங்கினால் அவர்கள் மீண்டும் கடமைக்கு திரும்புவதாக தெரிவித்திருக்கின்றனர். 

சுகாதார ஊழியர்களின் நடவடிக்கைகளில் தலையிட்டதும் இல்லை. அவர்களின் கடமை நடவடிக்கைகளை அரசியலாக்க நடவடிக்கை எடுத்ததும் இல்லை. அவ்வாறு அவர்களின் விடயங்களில்  நான் தலையிட்டிருப்பதை ஒப்புவித்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்வேன்.

அத்துடன் அவர்களது குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது. நானோ எனது செயலாளரோ அவர்களது எந்த விடயங்களிலும் தலையிட்டதில்லை. மாறாக சில பிரச்சினைகளில் வைத்தியர்கள் இரண்டாக பிளவுபட்டு செயற்படும்போது, அவர்கள் இரண்டு தரப்பினருடன் கலந்துரையாடி அவர்களை  ஒரு இடத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கின்றேன். 

வைத்திய நடவடிக்கைகளை நான் ஒருபோதும் அரசியலாக்கியதும் இல்லை. அரசியலாக்கப்போவதும் இல்லை. அதனால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எனக்கு எதிராக தெரிவிக்கும் குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் ஒப்புவித்தால் நாள் மறுதினமே வீட்டுக்கு செல்ல தயாராக இருக்கின்றேன்.

மேலும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் தற்போது மீண்டும் கடமைக்கு திரும்புவதற்காக, அதற்கு நியாயமான காரணத்தை தேடிக்கொண்டிருக்கின்றனர். அதன் பிரகாரமே அவர்கள் இவ்வாறு எனக்கு சவால் விடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

எனவே  வைத்தியர்களின் கடமைகளில் நான் ஒருபோதும் தலையிட்டதில்லை. அதனால் எந்த அச்சமும் இல்லாமல் அவர்களுக்கு கடமைக்கு திரும்பமுடியும் என்ற உத்தரவாதத்தை வழங்குவேன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16