கிளிநொச்சி சந்தைத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினல் குரே தெரிவித்துள்ளார்.

கடை உரிமையாளர்களை கிளிநொச்சி பிரதேச சபையில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை புதிய சந்தைத்தொகுதி ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.