இலங்கைக்கு சமையல் எரிவாயு இறக்குமதி செய்ய இரண்டு சர்வதேச கப்பல்கள் ஹம்பாந்தோட்டையில்

Published By: Vishnu

22 Dec, 2021 | 05:21 PM
image

(ஆர்.யசி)

நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் விதமாக கடந்த வாரம் மூன்று சர்வதேச கப்பல்களில் எரிவாயு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், சமையல் எரிவாயு நிரப்பிய மேலும் இரண்டு சர்வதேச கப்பல்கள் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன. 

வெகு விரைவில் நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்படுமென  இலங்கையின் பிரதான எரிவாயு விநியோக நிறுவனங்களான லாப் மற்றும் லிட்ரோ தெரிவிக்கின்றனர்.

இது குறித்து லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தேசார ஜெயவர்தன கூறுகையில், 

ஏற்கனவே லிட்ரோ நிறுவனத்தின் பணிப்பிற்கு அமைய கடந்த வாரம் மூன்று கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில் இவற்றில் இரண்டு கப்பல்களில் உள்ள எரிவாயுவின் தரம் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவற்றை நாட்டில் இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மூன்றாம் கப்பலின் எரிவாயுவில் மீதைல் இரசாயன கலப்பு குறித்த கேள்வி எழுந்துள்ள நிலையில் அதனையும் நிவர்த்தி செய்யும் செயற்பாடுகள் இப்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து லாப் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச் வாகபிடிய தெரிவிக்கையில், 

தரத்தில் உயரிய எரிவாயுவை நாம் இலங்கைக்குள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். தர நிர்ணய சபை மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் அங்கீகாரத்துடன் இவற்றை நாட்டுக்குள் இறக்குமதி செய்யவும், இன்று தொடக்கம் நுகர்வோர் சந்தைக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07