14 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவு முறை பெண் உள்ளிட்ட இருவர் கைது

22 Dec, 2021 | 09:10 PM
image

(எம்.மனோசித்ரா)

நீண்ட காலமாக 14 வயது சிறுமியொருவரை பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமை தொடர்பில் சிறுமியின் உறவினரான பெண் ஒருவரும், பணத்தை வழங்கி சிறுமியுடன் பாலியல் தொழிலில் ஈடுபட்ட நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 32 வயதுடைய கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரும், மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணொருவரும் ஆவர்.

இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 14 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை அவரது உறவுமுறை பெண்ணொருவர் பலவந்தமாக அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமையவே மேற்குறிப்பிட்ட இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவராவார். அவர் மருதானையில் உள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரை பிரிதொரு தனிவீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சில தினங்களுக்கு தனது வீட்டில் சிறுமியை தங்க வைத்துக் கொள்வதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ள குறித்த பெண், அந்த தினங்களில் சிறுமியை வெவ்வேறு இடங்களுக்குச் அழைத்துச் சென்று 50,000 ரூபாய் என்ற அடிப்படையில் வெவ்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

குறித்த சிறுமி 12 வயது முதல் கடந்த இரு ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண், அதனால் கிடைக்கப் பெற்ற பணத்தில் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பெற்றுக் கொண்ட வாக்குமூலத்திற்கமைய மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திரகுமார உள்ளிட்ட அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09