மாணவனை பாடசாலையில் சேர்க்க இலஞ்சம் பெற்ற விவகாரம் : அதிபரை விடுதலை செய்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்

Published By: Digital Desk 3

22 Dec, 2021 | 11:39 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பாணந்துறை மஹனாம நவோதா பாடசாலையின் 6 ஆம்  தரத்துக்கு  மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக இலஞ்சமாக 25 ஆயிரம் ரூபாவை  பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில், கொழும்பு  மேல் நீதிமன்றம் குற்றவாளியாக கண்டு நான்கு வருட சிறைத் தண்டனை விதித்த,  அதிபர் நதீகா குமுதினி பீரிஸை  மேன் முறையீட்டு நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்து விடுதலைச் செய்தது.

குறித்த அதிபர், மேல் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த, சி.ஏ. எச்.சி.சி. 280/17 எனும் மேன் முறையீட்டு மனுவை விசாரித்து, அதன் தீர்ப்பை அறிவித்தே அவரை விடுதலைச் செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி பி.குமார் ரட்ணத்தின் இணக்கத்துடன் நீதிபதி தேவிகா அபேரத்ன இந்த தீர்ப்பை அறிவித்தார்.

மேன் முறையீட்டு மனுதாரரான குறித்த அதிபர் சார்பில்  சட்டத்தரணிகளான ஹபீல் பாரிஸ்,  ஜனகம் சுந்தரமூர்த்தி,  நந்த விஜேசூரிய ஆகியோருடன் ஆஜராகி சிரேஷ்ட சட்டத்தரணி எராஜ் டி சில்வா முன் வைத்த வாதங்களை ஏற்றே , அவரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலைச் செய்வதாக  மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

மனுவில் பிரதிவாதிகளாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவும், சட்ட மா அதிபரும் பெயரிடப்பட்டிருந்த நிலையில், அவர்கள் சார்பில் சட்டத்தரணிகளான  சுபாஷினி சிறிவர்தன மற்றும்  அனுஷா சம்மந்தப்பெரும ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

மனு மீதான வாதங்கள் கடந்த நவம்பர் 23,30 ஆம் திகதிகளில் இடம்பெற்ற நிலையிலேயே, மேன் முறையீட்டு மனுதாரரின் வாதங்களை ஏற்றுக்கொண்டு மேல் நீதிமன்றம் குற்றவளியாக கண்ட அதிபரை நிரபராதி எனக் கூறி மேன் முறையீட்டு நீதிமன்றம் விடுவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53