பால் மா விலையை அதிகரிக்க முஸ்தீபு : அனைத்து அத்தியவசிய உணவு, மருந்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் 

Published By: Digital Desk 4

21 Dec, 2021 | 08:57 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்) 

 

ஏற்றுமதி, இறக்குமதியின் போதான கொள்கலன்கள் போக்குவரத்து கட்டணம்  20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  டீசல் விலை 10 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், உதிரிப் பகங்கள், டயர்,  மின் கலம், உராய்வு நீக்கி எண்னெய் போன்றவற்றின் விலை 50 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் பின்னணியிலும், இந்த கட்டண அதிகரிப்புக்கு தீர்மானித்ததாக  ஐக்கிய இலங்கை கொள்கலன் போக்குவரத்து வண்டிகளின் உரிமையாளர்கள் சங்க தலைவர்  சஹன் மஞ்சுள குறிப்பிட்டார்.

அதன்படி கொள்கலனின் நிறை மற்றும், கொண்டு செல்லப்படும் தூரம் ஆகியவற்றினை கருத்தில் கொண்டு கட்டணம் 20 வீதத்தால் அதிகரித்து அரவிடப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

 இந் நிலையில்,  கொள்கலன் கட்டணம் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதால், இறக்குமதி செய்யப்படும் அத்தியவசிய உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்து பொருட்களினதும் விலையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக  இறக்குமதியாளர்கள் சங்கத்தின்  உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதனிடையே,  இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை மீளவும் 10 வீதத்தால் அதிகரிக்க முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

திட்டமிடப்பட்ட வகையில் படிமுறை ரீதியிலான, விலை அதிகரிப்பொன்றுக்கான சாத்தியம் காணபப்டுவதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார கூறினார்.

டொலர் பிரச்சினையை மையப்படுத்தி வங்கிகளில் கடன் கடிதத்தை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல் நிலைமையால் பால் மா இறக்குமதி தாமதமடைந்துள்ளதாகவும், அதனை மையப்படுத்தியே பால் மா தட்டுப்பாட்டு நிலைமை ஒன்றும் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

 முன்னர் 2,3 வாரங்களில் நியூசிலாந்திலிருந்து பால் மா கப்பலை தருவிக்க முடியுமாக இருந்த போதும், தற்போது 2 முதல்3 மாதங்கள் அதற்காக தேவைப்படுவதாகவும், பால் மா இறக்குமதியளர்களுக்கான கடன் செலுத்தல் கால எல்லையை அதிகரிக்க நியூசிலாந்துடன் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56