ரி.விரூஷன்

வடமாகாண சபையின் பிரதி அவை தலைவரான அன்ரனி ஜெகநாதன் உயிரிழந்துள்ளார்.

இன்றைய தினம் காலை முல்லைதீவு முள்ளியவளை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு இருதய நோய் காரணமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

இதனையடுத்து முல்லைதீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவரான இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.