சிறுவர் சமு­தா­ய­மா­னது ஒரு இனத்தின், நாட்டின் ஏன் முழு உல­கத்­தி­னதும் பெறு­ம­தி­ மிக்க செல்­வ­மாகும். இன்­றைய சிறு­வர்கள் நாளைய நாட்டை வழி­ந­டத்­து­ப­வர்கள். ஆட்­சி­ செய்­ப­வர்கள். அதனால் தான் ஆதி முதல் இன்­று­வரை மனித சமு­தாயம் சிறுவர் நலனில் அக்­கறை செலுத்தி வரு­கின்­றது. ஒவ்­வொரு குழந்­தை­யையும் நல்ல நிலையில் வளர்த்­தெ­டுத்து இனத்­திற்கும் நாட்­டுக்கும் உல­கிற்கும் ஒப்­ப­டைக்க வேண்­டி­யது ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் தவிர்க்க முடி­யாத தவிர்க்­கக்­கூ­டாத பொறுப்­பா­கின்­றது.

இன்று உல­க­ளா­விய ரீதியில் மனித உரி­மை­க­ளுக்கு மதிப்­ப­ளிக்க வேண்டும். பேணிக்­காக்க வேண்டும் என்று கூறப்­பட்டு வரு­கின்­றது. மனித உரி­மை­களைப் பேணிக் காப்­ப­தற்கு அடிப்­ப­டையாக அமை­வது இளம் பரா­யத்­தி­ன­ருக்கு அப்­ப­ரா­யத்தில் வழங்­கப்­படும் பாது­காப்பும் கல்­வியும் உயர்ந்த சிந்­த­னை­க­ளு­மே­யாகும். இள­வ­ய­தி­னரை அதா­வது சிறு­வர்­களை உரிய காலத்தில் அவர்­க­ளுக்­கு­ரிய உரி­மை­களை வழங்கி பேணாது விடு­வதே உல­க­ளா­விய ரீதியில் மனித உரிமை மீறல்­க­ளுக்கு வழி செய்­கின்­றது. இதனைப் புரிந்து கொண்டு செயற்­ப­டா­மையே மனி­த­குல அவ­லங்­க­ளுக்கு உலகம் முகம்­கொ­டுத்­துள்­ளது என்­பதை மறுக்க முடி­யாது.

சிறு­வர்கள் என்போர் மனித வளர்ச்­சியின் ஆரம்ப கட்­டத்தில் உள்­ள­வர்கள். மரம், செடி, கொடி­க­ளையோ, பற­வைகள், மிரு­கங்­க­ளையோ சிறு வயதில் போசித்து, பாது­காத்து, வளர்த்து பின்­னாளில் நல்ல பயனைப் பெறு­வ­தற்கு முனையும் மனித சமூகம் தனது சமூக சிறு­வ­ய­தினர் விட­யத்தில் போதிய அக்­கறை காட்­டு­வ­தில்லை. சிறுவர் சமு­தாயம் உரிய உரி­மை­களை அனு­ப­விக்­கா­ததால் பின்­னாளில் வளர்ந்­தோ­ராகும் போது வாழ வேண்­டிய முறையில் வாழாது வழி­த­வறிச் செல்லும் நிலை­யேற்­படும். அத­னா­லேயே இன்று சிறுவர் உரி­மைகள் தொடர்பில் அதி­க­மாகப் பேசப்­ப­டு­கின்­றது. அதற்­காகப் பல சட்­டங்­களும் இயற்­றப்­பட்­டுள்­ளன. சிறு­வ­ருக்­கு­ரிய உரி­மைகள் முழு­மை­யாகச் செயற்­ப­டுத்­தப்­படாது இருப்­பதும் வழக்­கி­லுள்ள கவ­லை­தரும் நிலை­யா­க­வுள்­ளது.

எவ்­வா­றா­யினும் ஆண்டு தோறும் அக்­டோபர் மாதம் முதலாம் திக­தி சிறுவர் உரிமை தின­மாக உல­க­ளா­விய ரீதியில் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது. கூட்­டங்கள், விழாக்கள், அறிக்­கைகள், கலை நிகழ்­வுகள் என்று அந்த ஒரு நாள் ஆர­வா­ரிக்­கப்­ப­டு­கின்­றது.

வர­லாற்றின் அடிப்­ப­டையில் சிறுவர் உரி­மைகள் பற்றிப் பேசும் முதற் பிர­க­டனம் 1924 ஆம் ஆண்டு அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது. 1959 ஆம் ஆண்டு மேற்­கூ­றிய பிர­க­ட­னத்­திற்கு வலுச்­சேர்க்கும் பிர­க­ட­னத்தை ஐக்­கிய நாடுகள் சபை வெளி­யிட்­டது. “அதில் மனித குலம் சிறு­வர்­க­ளுக்­கு­ரிய இடத்தை வழங்­குவதற்­கான கடப்­பா­டு­டை­யது” என்று கூறப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் 1979 ஆம் ஆண்டு சிறுவர் ஆண்டைக் கொண்­டாடும் வரை உலக நாடுகள் சிறுவர் உரி­மை­களை பேணும் விட­யத்தில் கூடிய கரி­சனை காட்­ட­வில்லை.

1979 ஆம் ஆண்டு சிறுவர் ஆண்­டாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே உலக அளவில் சிறுவர் உரி­மை­களை பேண வேண்­டு­மென்ற புத்­தெ­ழுச்சி உரு­வா­னது. 1989 ஆம் ஆண்டு சிறுவர் உரி­மைகள் தொடர்­பான சாசனம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. காலத்­திற்குக் காலம் சர்­வ­தேச தொழில் தாபனம் மற்றும் ஐக்­கிய நாடுகள் சபை ஆகி­ய­வற்றில் சிறுவர் உரி­மைகள் தொடர்­பாக வெளி­யி­டப்­பட்ட சாச­னங்­களை இலங்­கையும் 1992ஆம் ஆண்டு ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

அதன்­படி குறித்த சிறுவர் உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச சட்­டத்­தி­லுள்ள அம்­சங்­களை எமது நாட்டு சிறு­வர்­களும் சட்­டப்­படி அனு­ப­விக்கும் உரித்­துள்­ள­வர்கள் ஆவர். இவ்­வாறு சிறு­வர்­களின் உரி­மை­களைப் பேணிப்­பா­து­காப்­ப­தற்­காக இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு மூல­மா­கவும் பாரா­ளு­மன்­றத்தில் இயற்­றப்­பட்ட சட்­டங்கள் மூல­மா­கவும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இலங்­கையில் சிறுவர் உரி­மைகள் தொடர்­பாக 1992ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட சாச­னத்தில் கூறப்­பட்­டுள்­ள­வற்றில் சில பின்­வரு­மாறு உள்­ளன.

 உயிர் வாழ்­வ­தற்கும், அபி­வி­ருத்­திக்­கு­மான உரிமை.

 பிறப்பால் பெய­ரையும் இனத்­தையும் பெற்றுக் கொள்­வ­தற்­கான உரிமை.

 பெற்­றோரைப் பற்றி அறிந்து கொள்­வ­தற்கும் அவர்­களின் பாது­காப்பைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான உரிமை.

 பெற்­றோ­ரி­ட­மி­ருந்து பிரிக்க முடி­யா­மைக்­கான உரிமை.

 கருத்­துக்­களை வெளி­யி­டு­வ­தற்­கான உரிமை.

 சிந்­திப்­ப­தற்கும் மன­ச்சாட்­சிக்கும் மதத்­திற்­கு­மான உரிமை.

 கூட்­டி­ணை­வ­தற்­கான உரிமை.

 தனித்­து­வத்­திற்­கான சுதந்­திரம்.

 போதிய கல்­விக்­கான உரிமை.

 ஆரோக்­கி­யத்­திற்­கான உரிமை.

 ஓய்­வுக்கும் விளை­யா­டு­வ­தற்­கு­மான உரிமை.

 பொரு­ளா­தார சுரண்­டல்­க­ளி­லி­ருந்து பாது­காத்துக் கொள்­வ­தற்­கான உரிமை.

 பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­தி­லி­ருந்து பாது­காத்துக் கொள்­வ­தற்­கான உரிமை.

 ஆபத்­தான செயல்­களில் ஈடு­ப­டுத்­து­வ­தி­லி­ருந்து பாது­காத்துக் கொள்­வ­தற்­கான உரிமை.

 குரூர அல்­லது சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உட்­ப­டு­வ­தி­லி­ருந்து அல்­லது தண்­ட­னை­க­ளி­லிருந்து விடு­ப­டு­வ­தற்­கான உரிமை.

 சாதா­ரண வழக்கு விசா­ர­ணைக்­கான உரிமை.

 சுதந்­தி­ரத்­திற்கும் தற்­காப்­பிற்­கு­மான உரிமை.

இலங்கை சிறுவர் உரி­மைகள் தொடர்­பான சட்­டமும் தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை சட்­டமும் சிறு­வர்­களின் வய­தெல்லையை பதி­னெட்­டாக வரை­யறை செய்­துள்­ளன.

நாட்­டில் சிறுவர் உரி­மை­களைப் பாது­காப்­ப­தற்­கான சட்­ட­வி­திகள் பல இருந்த போதிலும் அவை உரி­ய­படி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டா­தி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. ஏட்­ட­ளவில் உள்­ளவை நடை­மு­றையில் செயற்­ப­டுத்­தப்­ப­டு­மாயின் வழி­த­வறிச் செல்லும் இளம் ­ச­மு­தா­யத்­தி­னரை நேரிய வழியில் நெறிப்­ப­டுத்தி நாட்டின் பெறுமதிமிக்க மனிதர்களாக ஆக்க முடியும்.

நாட்டில் இன்று நடைபெற்றுவரும் பல்வேறு கொடுமைகளுக்கும் போதைப் பொருள் பாவனைகளுக்கும் சகலவித துஷ்பிரயோகங்களுக்கும் காரணம் இளம்சமுதாயத்திற்கு உரிய உரிமை களை அனுபவிக்க வழி செய்யாது அவர்களது உரிமைகளை மதிக்காது புறந் தள்ளியமையேயாகும். இதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை. வளர்ந்தவர்கள், பெரியவர்கள் செய்யும் தவறுகளுக்கும் தப்புகளுக்கும் பிழையான, முறை தவறிய செயற்பாடுகளுக்கும் அவர்களது இளமைப் பருவத்தில் உரிய உரிமைகளை அறிந்து கொள்ள முடியாது மறுத்தமையும் முக்கிய ஏதுவாக அமைந்துள்ளது.