நாட்டில் கடந்த முப்­பது ஆண்­டு­க­ளாக இடம்­பெற்ற ஆயுதப் போராட்டம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­ போதும் எம் தமிழ் மக்­களின் உரிமைப் போர் இன்னும் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வில்லை என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்­துள்ளார்.

வட­மா­காண அர­சாங்க நிர்­மாண நிர்­மா­ணிகள் சங்­கத்தின் கூட்டம் நேற்றுக் காலை யாழ்.பொது நூல­க கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது.

பிர­தம விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

வடக்கில் பல அபி­வி­ருத்­தித்­திட்­டங்கள்இ கட்­டட நிர்­மா­ணங்கள் மேற்­கொள்­ளப்­படு­கின்­றன. குறிப்­பாக இங்கு ஏரா­ள­மான வங்­கிகள் முத­லீ­டு­களை செய்­துள்­ளன. ஆனால் குறிப்­பிட்ட சில வங்­கி­களை தவிர ஏனைய பெரும்­பா­லான வங்­கிகள் மக்­க­ளு­டைய தேவை­களை நிறை­வேற்­று­வ­தாக இல்லை. மக்­க­ளு­டைய முத­லீ­டுகள் போன்ற தேவை­களை நிறைவு செய்­வ­து­மில்லை.

மக்­களின் பல தேவைகள் இன்­னமும் தீர்க்­கப்­ப­டா­மலே உள்­ளது. குறிப்­பாக அர­சியல் தீர்வு எமக்கு கிடைக்­க­வில்லை. பொரு­ளா­தார ரீதி­யான மாற்­றங்­களும் எம் மக்­க­ளி­டத்தில் இருந்து எழ­வில்லை. இவ்வாறான மாற்றங்கள் நடைபெற வேண்டும்.

போர் இன்னமும் முடியவில்லை. ஆயுதப் போராட்டமே முடிவுக்கு வந்துள்ளது எனத் தெரிவித்தார்.