ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்கி உடனடியாக விடுதலை செய்யுங்கள் - ஜனாதிபதியிடம் சஜித் வேண்டுகோள்

Published By: Vishnu

20 Dec, 2021 | 09:55 PM
image

(நா.தனுஜா)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசனும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவைப் பார்வையிடுவதற்காக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றிருந்தனர். 

ரஞ்சன் ராமநாயக்கவைப் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

 எமது கட்சி உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலையில் இருக்கவேண்டிய ஓர் நபரல்ல. மாறாக அவர் நாட்டினதும் நாட்டுமக்களினதும் நலனை முன்னிறுத்தி செயற்பட்ட ஒருவராவார். அவர் நாட்டிற்கு ஆற்றிய சேவையை ஒருபோதும் மறக்கமுடியாது.

அத்தகைய ஒருவர் நீண்டகாலமாக சிறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், சர்வதேச பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் அவருக்குச் சார்பாக 9 கருத்துக்களை வெளியிட்டு அவரை ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்கீழ் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

 சீனி மோசடி, இரசாயன உர மோசடி உள்ளடங்கலாகப் பல்வேறு மோசடிகளிலும் ஈடுபட்டவர்கள் வெளியே சுதந்திரமாக இருக்கின்றார்கள்.

அதேபோன்று எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படவோ அல்லது அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவோ இல்லை.

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புபட்டவர்களுக்கும் தவறிழைத்தவர்களுக்கும் தண்டனைகள் வழங்கப்படவில்லை.

 இவ்வாறானதொரு பின்னணியில் மனிதாபிமான அடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வதன் ஊடாக மீண்டுமொருமுறை நாட்டிற்கு சேவையாற்றுவதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் நான் பலமுறை கோரிக்கைவிடுத்திருக்கின்றேன்.

அதன்படி அனைத்து ஜனநாயக உரிமைகளையும் அனுபவிக்கக்கூடியவாறான முழுமையான விடுதலையை ரஞ்சன் ராமநாயக்கவிற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வர வேண்டும் என்றார்.

அதுமாத்திரமன்றி அவர் விடுதலை செய்யப்படும் வரையில் அதனை முன்னிறுத்தி ஜனநாயக வழிமுறையில் அனைத்துவிதமான போராட்டங்களிலும் ஈடுபடுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கூறுகையில்,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொலை, கொள்ளை உள்ளிட்ட மிகமோசமான குற்றங்களில் ஈடுபட்டமைக்காக சிறைப்படுத்தப்படவில்லை.

மாறாக இந்த நாட்டில் வாழும் அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தமையினாலேயே அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

ஆகவே ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோருகின்ற அதேவேளை, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு நீதிமன்றத்திடமும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31