வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு ; நுவரெலியாவில் நோயாளிகள் பாதிப்பு

20 Dec, 2021 | 04:12 PM
image

ஐந்து மாவட்டங்களில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று திங்கட்கிழமை காலை 08.00 மணி முதல் 24 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். 

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ் போராட்டத்தினால் மாவட்ட பொது வைத்திசாலையிலும், நகரில் உள்ள சில தனியார் வைத்தியசாலையிலும்  வெளி நோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் என்பன முற்றாகத் தடைப்படுள்ளது.

இந்நிலையில்,  நுவரெலியா மாவட்ட  பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன வழமைபோல் இயங்குகிறது.

எங்களின் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு எமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என நுவரெலியா ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டம் காரணமாக வைத்தியசாலை சேவைகள் முற்றிலும்  ஸ்தம்பித்த நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47