தலாய் லாமாவுக்கு ஆசி வழங்கி நன்றி தெரிவித்த அஸ்கிரி பிரிவேனா பீடாதிபதி

Published By: Digital Desk 3

20 Dec, 2021 | 02:15 PM
image

இலங்கை பௌத்த பிக்குகள் திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவிற்கு ஆசீர்வழங்கினர். பௌர்ணமி தினத்தில் இணையம் ஊடாக இடம்பெற்ற நிகழ்விலேயே இவ்வாறு ஆசிர்வாதம் வழங்கப்பட்டதுடன் சிறப்புரை ஆற்றியமைக்காக தலாய் லாமாவுக்கு  அஸ்கிரி மகா விகாரையின் பிரிவேனா பீடாதிபதி நாரம்பனாவே ஆனந்த தேரர் நன்றி தெரிவித்தார்.

தலாய் லாமாவின் போதனைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இதன் போது குறிப்பிட்டார். 

இலங்கை பௌத்த பிக்குகள் என்ற வகையில் தலாய் லாமாவை ஆசிர்வதிக்க விரும்புவதாகவும் இதன் போது தெரிவித்திருந்தார்.

இலங்கை திபெத்திய பௌத்த சகோதரத்துவ சங்கத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தேரவாத சங்க உறுப்பினர்களுக்கு தலாய் லாமாவின் இரண்டு நாட்கள் மகா சதிபத்தான சூத்திரங்கள் பற்றிய போதனைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இதன் போது இலங்கை தேரர்;கள் மற்றும் பிற நாடுகளில் இருந்து துறவிகள் தலாய் லாமாவிடம் கேள்விகளை எழுப்பினர்.இதன் போது சிறப்புரையாற்றி அனைத்து ஆன்மீக கேள்விகளுக்கும் தலாய் லாமா பதிலளித்துள்ளார்.

திபெத்தீய ஆன்மீக தலைவரான தலாய் லாமா இலற்கை வருதற்கு ஏற்பாடுகள் காணப்பட்ட போதிலும் சீனாவின்  கடும் அழுத்தத்தின் விளைவாக இதுவரையில்  அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44