மீன் பிடிக்கச்சென்ற சிறுவன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழப்பு - யாழில் சம்பவம்

Published By: Digital Desk 4

20 Dec, 2021 | 12:54 PM
image

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் தோட்டக்காணி கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த 8 வயது சிறுவன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் தோட்டக்காணி கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த 8 வயது சிறுவன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் பருத்தித்துறை திக்கம் நாச்சிமார் கோவிலடியில் இடம்பெற்றது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 8 வயதுடைய நியந்தன் ரித்திக்குமார் என்ற சிறுவனே உயிரிழந்தார்.

பெற்றோர் வேலைக்குச் சென்றுள்ள நிலையில், குறித்த சிறுவன் தோட்டக்காணியில் பட்டம் ஏற்றி விளையாடிவிட்டு சகோதரியுடன் இணைந்து தோட்டக்காணியில் உள்ள கிணற்றில் தூண்டில் போட்டு மீன்பிடித்த போது, கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளான்.

சம்பவத்தை ஓடிச் சென்று உறவினர்களிடம் சகோதரி தெரிவித்துள்ளதை அடுத்து உறவினர்கள் சென்று கிணற்றில் தேடிய போது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனான் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவராசா, சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க அறிக்கையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31