கொழும்பு - ஹட்டன் நோக்கி சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து நபரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொழும்பு - ஹட்டன் நோக்கிச் சென்ற புகையிரதம் ரம்புக்கணை புகையிரத நிலையத்தை அண்மிக்கையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

43 வயது மதிக்கத்தக்கவர் இச் சம்பவத்தில் உயிரிழந்திருப்பதாகவும் தற்கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.